பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறுபாணாற்றுப்படை 31.

நெய்தல் நிலத்தில் இருக்கும் ஊர். கிடங்கில்" கோமானாகிய நல்வியக் கோடனைப் பாடிக்கொண்டு நீங்கள் போனால் அங்குள்ள பரதவர் தமக்குரிய உணவைத் தருவார்கள். காடு அடர்ந்த முல்லை நிலத்தில் உள்ள உப்பு வேலூர் என்ற ஊருக்குப் போனால் அங்கே: உள்ளவர்கள் சமைத்த புளிக்குழம்போடு கலந்த சோறும் ஊனும் கிடைக்கும்’ என்று மேலே சொல்கிறான். -

"மருத நிலத்தினிடையே உள்ளது ஆமூர். அங்கே அந்தணர்கள் வாழ்கிறார்கள். உழவர்கள் இருக்கிறார்கள் உழவர்கள் வீட்டில் ஆடவர்கள் இல்லாவிட்டாலும், அங்கே உள்ள மகளிர், குழந்தைகளை அனுப்பி உங்களை அழைத்து வரச் செய்து நல்ல அரிசிச் சோறும் தண்டுக் குழம்பும் கொடுப்பார்கள்." or *

பிறகு நல்லியக் கோடன் இருக்கும் ஊரைப் பற்றிச் சொல்கிறான். "அவனது யானைபோர்க்களத்தில் பகைவர் பிணங்களைத் துகைத்துக் கால் நகங்களெல்லாம் சிவந்: திருக்கின்றன. பேய் மகள் மாமிசத்தை உண்டு சிரித்தால் எப்படி அவள் பற்கள் இருக்கும்? அப்படி இருக்கின்றன. அந்த நகரங்கள்! . :

"அவனுடைய நகர வாயிலினில் எல்லோரும் போக முடியாது. தடாரிப் பறை கொட்டும் பொருநர் போக லாம்; புலவர் போகலாம்; வேதபாரகராகிய அந்தணர் போகலாம்; வேறு யாரும் உத்தரவன் றி உள்ளே புக: . முடியாது.” . . - r

நல்வியக் கோடன் அவைக்களத்தில் வீற்றிருக்கிறான். அவனைச் சுற்றி அறிஞரும் வீரரும் மகளிரும் பிறரும் இருக்கிறார்கள். அவர்கள் அவனைப் புகழ்கிறார்கள். அவனுடைய இயல்புகள் பல. எல்லா இயல்புகளையும் எல்லாரும் பாராட்ட முடியுமா? சங்கீதம் தெரியாதவன்