பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தமிழ் நூல் அறிமுகம்

ராகத்தைப் பாராட்டினால் அது பைத்தியக்காரத்தனம் அல்லவா? இங்கே அந்த் அந்த இயல்புகளைத் தெரிந்த வர்கள் அவ்ற்றைப் பாராட்டுகிறார்களாம்.

செய்ந்நன்றி அறிதல், சிறுமையுடைவர்களோடு சேராத பெருந்தகைமை, எப்போதும் இன்முகத்தோடு இருத்தல்,"யாவருக்கும். இனியவனாக ஒழுகுதல் ஆகிய குணங்களை அறிவுடைய சான்றோர்கள் பாராட்டு .கிறார்கள். அஞ்சினவர்களை அஞ்சேல் என்று பாதுகாக் கிறான்; நெடுங்காலம் நிற்கும் சினம் அவனிடம் இல்லை; வீரர்களின் கூட்டத்தில் அவன் சிறந்து விளங்குகிறான்; கெட்டோடும் படைகளைத் தாங்கி நிறுத்துகிறான்; இந்த இயல்புகளைச் சொல்லி வீரர்கள் வாழ்த்துகிறார்கள். அழகிய பெண்களும் அவனை ஏத்துகிறார்கள். அவர்கள் எவற்றைச் சிறப்பிக்கிறார்கள் தெரியுமா? நினைத்ததை முடிக்கும் ஆற்றல், மகளிர் பலராலும் விரும்பப்படும் தன்மை, ஒருத்தியிடமே அடிமையாகாமை, மகளிர் வருந்தும் தன்மையை அறிந்து உதவுதல் ஆகியவற்றை அவர்கள் வியந்து பாராட்டுகிறார்கள். புலவர்கள் முதலிய பரிசிலர்கள், அறிவில்லாத்வர் முன் ஒன்றும் அறியாதவனைப்போல இருப்பதையும், புலவர்களின் முன் மிக்க அறிவுடையவனாக விளங்குவதையும், தரம் அறிவ தையும், எல்லை இல்லாமல் கொடுப்பதையும் சிறப்பிக்

கிறார்கள். - ... • * -

'அவனுடைய அவைக்களத்துக்குச்சென்று அவனைப் பாடுங்கள்' என்கிறான் ஆற்றுப் படுத்தும் பாணன். யாழை வாசித்துப் பாடுங்கள். அப்படிச் சிலவற்றைப் பாடுவதற்கு முன்பே அவன் மூங்கிலை உரித் தாற் போன்ற மெல்லிய ஆடைகளைத் தந்து உடுத்துக் கொள்ளச் செய்வான். நல்ல மதுவைத் தருவான்