பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறுபாணாற்றுப்படை 岛器

பல வேறு வகையான உண்டிகளை வழங்கி உடனிருந்து உண்ணச் செய்வான்' என்கிறான்.

நளபாகம், வீம பாகம் என்று இரண்டு வகைப் L}IT&5. சாஸ்திரம் உண்டு. "வீமன் இயற்றிய சமையற் கலை நூலின்படி அமைந்த பலவகை அடிசிலைத் தருவான்' என்று சொல்கிறான் வழி காட்டும் பாணன். -

'காண்டவ வனத்தைக் கொளுத்திய அம்பையுடய துரணியைப் பெற்றவனும் பூ வேலை செய்த கச்சைக் கட்டினவனும் புகழை உடையவனுமாகிய அருச்சுன னுக்கு முன்னவனாகிய மலை போன்ற மார்பையுடைய வீமன் தந்த நுண்ணிய பொருளையுடைய நூலிலுள்ள செய்முறைகளினின்றும் பிழை படாத பல வேறு. உணவுகள்' என்று விரித்துரைக்கின்றான்.

காஎரி ஊட்டிய கவர்கணைத் துணிப் பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் ப்னுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்.”

'விருந்து வழங்கிய பிறகு பகைவர்களாகிய வீரர்கள் தந்த நிதித்திரளோடு குதிரை பூட்டிய தேரையும் அதை. ஒட்டும் பாகனையும் வழங்குவான்' என்று முடிக்கிறான்.

இந்த ஆற்றுப் படையில் பாலைநிலத்தின் வெப்பம் முதலில் தெரியும். பிறகு விறலியரின் தலைமுதல் கால் வரையிலுள்ள அழகு விரியும். நெய்தல், குறுஞ்சி, மருதம், முல்லை ஆகிய நிலங்களின் வளம் காட்சி தரும். ஏழு பெருவள்ளல்கள் வருவார்கள். வறுமையின் சித்திரம் தோன்றும். நல்லியக் கோடனின் வீரமும், ஈகையும், பிற: நற்பண்புகளும் அடுக்கடுக்காக அலரும். அவனுடைய இசை எங்கும் சென்று நிலைத்திருக்கிறது. அதனால்,