பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெரும்பாணாற்றுப் LI6t)l_.

பெரிய யாழை இயக்கும் பாணன் பெரும்பாணன், அவனிடம் வேறு ஒரு பாணன், தொண்டைமான் இளந் திரையனிடம் போனால் உனக்குப் பரிசில் கிடைக்கும் என்று சொல்கிறான். இதுதான் பெரும்பாணாற்றுப் படையின் திரண்ட கருத்து. 500அடிகளையுடைய இதைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பத்துப் பாட்டில் நாலாவது பாட்டாகக் கோக்கப் பெற்ற நூல்

அது. -

வழி காட்டும் பாணன் ஆற்றுப்படையில் வரும் வழக்கம்போல், போகும் வழியில் உள்ள காட்சிகளையும் அங்கே உள்ளவர்கள் செய்யும் உபசாரங்களையும் தொண்டைமான் இளந்திரையனுடைய பெருமையையும் விரிவாகச் சொல்லும் வகையில் பாட்டு அமைந்திருக்கிறது. 'நான் அவனிடம் பெரும் பரிசில் பெற்று வருகிறேன். நீயும் போனால் பெறலாம்' என்று அவன் சொல்கிறான்.

தொண்டைமான் இளந்திரையன் பழியே இல்லாமல் செங்கோல் ஒச்சுபவன். அதனால் அவனுடைய நாட்டில் யாருக்கும் தீங்கே இராது. அவனுடைய நகருக்குப் போகிற வழியில் வழிப்பறி கள்வர் இருக்க மாட்டார்கள். இடி கூடப் பங்கரமாக இடிக்காது.