பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் நூல் அறிமுகம்

பாம்பு கடிக்காது. காட்டு விலங்குகள் துன்புறுத்து வதில்லை. இப்படி இருப்பது ஏதோ தர்மயுகம் என்று தோன்றுகிறதல்லவா? “நீங்கள் எங்கெங்கே தங்க விரும்புகிறீர்களோ அங்கங்கே தங்கிப் போகலாம். அங்கங்கே உள்ள மக்கள் அவரவர்கள் வழக்கத்துக்கு ஏற்ற உணவுகளைத் தந்து உபசரிப்பார்கள். இது வழி காட்டுபவன் கூற்று.

போகிற பாணன் சுத்த சைவன் அல்லன். சுவை. உள்ள எந்த உணவையும் உண்ணுகிறவன். ஆகவே, அங்கங்கே கிடைக்கும் உணவு வகைகளைப் பற்றி வழி காட்டும் பாணன் சொல்கிறான். - பாலை நிலத்தில் வண்டியிலே பாரம் ஏற்றிக்கொண்டு. போகிறார்கள். அந்த வண்டிகளைக் காக்கும் காவலர்கள் அடியிலே செருப்பும் உடம்பில் சட்டையும் அணிந்திருக் கிறார்கள், செருப்பை அடிபுதை அர்ணம் என்று சொல் கிறார் புலவர். பாதரட்சை என்று வடமொழியில் சொல் கிறோம் அல்லவா? சட்டையைப் படம் என்கிறார்.

அடிபுதை அரணம் எய்திப் படம்புக்குப் பொருகனை தொலைச்சிய புண்தீர் மார்பின்' என்று அவர்களை வருணிக்கிறார் புலவர். கழுதையின் மேல் மிளகுப் பொதியை ஏற்றிக்கொண்டு போகிறார்கள். மெல்லிய பையில் மிளகு இருப்பதனால் அதைப் பார்த் தால் பலாக்காயைப் போல முள்ளு முள்ளாகத் தெரி கிறது. r

சிறுசுளைப் பெரும்பழம் கடுப் பயிரியல் புணர்ப்பொறை" - |மிரியல் - மிளகு, பொறை - பாரம்.) பாலை நிலம், காடு முதலிய இடங்களில் அந்த அந்த இடங்களில் உள்ள உணவு வகைகள் கிடைக்குமாம்.