பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெரும்பாணாற்றுப்படை 37

முல்லை நிலமாகிய காட்டுக்குப் போனால் அங்கே 9ಣ6T# சோறும் பாலும் கிடைக்கும். அங்கே உள்ள ஆய்க்குலப் பெண்களைப் பற்றிய வருணனை வருகிறது.

ஆய்க்குலப் பெண் விடியற்காலையில் எழுந்து தயிர் கடைகிறாள். கடையும்போது நாய்க்குடை போலக் கொப்புளம் எழுகிறது. தயிரைக் கடைந்து மோர் விற்கச் செல்கிறாள். மோரை விற்று அதனால் குடும்பச்செலவைச் செய்கிறாள். நெய்யை விற்றுப் பணம் சேர்க்கிறாள். அதைக் கொண்டு அவள் தங்கம் வாங்கி நகை செய்து கொள்வதில்லை. எருமை வாங்கி மேலும் வருவாய்க்கு வழி செய்கிறாள். அவளுடைய பொருளாதார அறிவை வியக்கத்தானே வேண்டும்? -

'அளைவிலை உணவிற் கிளையுடன் அருந்தி 'நெய்விலைக்கு அட்டிப் பசும்பொன் கொள்ளாள், எருமை கல்லான் கருணாகு பெறுஉம்.' -

இதோ அந்தணர் வீடு. அங்கே பந்தற் காலில் கன்றுக் குட்டியைக் கட்டியிருக்கிறார்கள். வீட்டைச் சாணம் போட்டு மெழுகியிருக்கிறார்கள். அங்கே கோழியோ நாயோ அணுகுவதில்லை. அங்கே உள்ள்ே கிளி வேதத்தைச் சொல்கிறது.

அமனையுறை கோழியொடு ஞமலி துன்னாது; வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்.”

அத்தகைய மறை காப்பாளர் உறை பதிக்குப் போய்த் தங்கினால் அருந்ததி போன்ற பெண் சமைத்த இராசான்னம் என்ற பெயருள்ள அரிசியால் சமைத்த சோற்றை வழங்குவாள். அது அவியாகத் தேவர்களுக்கு வழங்குவதற்கு உரியது. அந்தப் பிரசாதத்தை உண்ண லாம். நறுமோர், வெண்ணெய், கும்மட்டி மாதுளங்

3 سحق