பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழில் உள்ள நூல்கள் எண்ணிற்ந்தன. தமிழில் இலக்கியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் ஆயின.ஆகவே, ஆயிரக் கணக்கான நூல்கள் தமிழில் தோன்றியிருக்க வேண்டும். தோன்றுகின்ற நூல்கள் யாவும் நிலைதிற்ப தில்லை. கால வெள்ளத்தில் அழியாமல் நிற்பவை சிலவே. தகுதிகாரணமாக அந்த நூல்கள் மங்காமல் ஒளிர் கின்றன.

இப்போது தமிழில் கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அது இலக்கண்நூல். பழமையான நூலாயினும் இன்றும் அது பயன்படுவதாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடி பழமையானவை சங்க நூல்கள். தமிழிச் சங்கங்கள் மூன்று இருந்தன என்றும். அந்த மூன்றிலும் பல பெரும் புலவர்கள் இருந்து தமிழாராய்ந்தார்கள் என்றும், பல நூல்களை இயற்றி னார்கள் என்றும் ஒரு வரலாறு வழங்குகிறது. கடைசியில் மூன்றாவது சங்கம் பாண்டி நாட்டில் மதுரையில் இருந்தது. அந்தச் சங்கத்தினரால் இயற்றப் பெற்ற நூல் களில் இப்போது கிடைப்பவை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்பன. அவற்றை அடுத்துத் தோன்றியவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

பாரத நாட்டில் வழங்கும் மொழிகளில் வடமொழியும் தமிழ்மொழியும். மிகப் பழமையானவை. தமிழ்நாகரிகம் தொன்மையானது. ஸிந்துநதி வெளியில் மொகெஞ்ச. தடோவில் பல்லாயிரம் ஆண்டுகளுககு முன் இருந்தது. பழம் திராவிடர் நாகரிகமென்றும், பழந்தமிழ் நூல்களிற்