பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv

கானும் சொல்லுக்கும் பொருளுக்கும் அங்கே காணப்படு: வனவற்றுக்கும் பல ஒப்புமைகள் இருக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

இப்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலிருந்து அக்காலத் தமிழர் வாழ்க்கையை ஒருவாறு தெரிநது கொள்ள இயலும். தனிமனிதன்;சமுதாயம் என்ற இரண்டு வகையிலும் தமிழர் எவ்வாறு சிறந்து நின்றனர் என் பதைக் காட்டும் கண்ணாடிகள் அந்த துரல்கள். - -

பொதுவாகப் பாடல்களை அகமென்றும் புறமென்றும் இருபிரிவாகப் பிரிப்பது தமிழ் மரபு. அறம், பொருள் இன்பம், வீடு என்பவற்றில் இன்பத்தோடு தொடர்புடை யது அகமென்றும், மற்ற மூன்றையும் பற்றியவை புற. மென்றும் வகுக்கப்பெறும்.

அப்பொருளமைதியுள்ள நூல்களில் காதல் வாழ்க்கை யின் பல்வேறு நிலைகள் சொல்லப் பெறுகின்றன. தமிழுக்கே சிறப்பானது, வரையறையானது என்று. சிறப்பித்து இந்த அகப்பொருளைச்சொல்வார்கள். உலகம் முழுவதற்கும் காதல் வாழ்க்கை பொதுவானதென்றாலும் இலக்கியமாக அந்த வாழக்கையைச் சொல்லும்போது, இன்னவாறு அமைக்கவேண்டும் என்ற வரையறை தமிழில் இருக்கிறது. அந்த வரையறைதான் தமிழுக்கே உரியது. அகப்பொருள் நூல்களில் வரும் காதல் காட்சிகள் யாவும் அப்படி யப்படியே தமிழ் நாட்டில் நிகழ்ந்தவை என்று கொள்ளக் கூடாது. இல்லது இனியது,புலவரால் நாட்டப் படுவது என்று அந்த முறையைச் சொல்வர், இறையனா

ரகப்பொருள் உரையாசிரியர்.

காதல் உணர்ச்சியை மிகத்தூய்மையாக வைத்துப் போற்றினர் தமிழர்,'மலரினும் மெல்லிது காமம்'என்பது பெயர் குறித்துச்சுட்டிய ஒருவருடன் தொடர் ாகக் காதல் இருக்குமாயின் அது அகப்பொருளா புறத்தே நின்றுவிடும். கடவுள் சம்பந்த