பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. முல்லைப் பாட்டு

மழைக்காலம், திருமாலைப்போல மேகங்கள் கறுத்து: வானத்தில் படர்ந்து மழை பொழிந்திருக்கின்றன. மாலைக்காலம். போருக்குச் சென்றிருக்கும் மன்னன் வெற்றி பெற்று வருவானா என்பதைத் தெரிந்து கொள்ளச் சகுனம் பார்ப்பதற்காகச் சில முதிய பெண்மணிகள், காவல் நிறைந்த அந்தப்பழைய ஊருக்குப் புறம்பே போய், நெல்லையும் முல்லைப் பூவையும் தூவித். தெய்வத்தைத் தொழுகிறார்கள். அப்பொழுது நல்ல சகுனம் உண்டாகிறது.

மேய்ச்சலுக்குப் போன பசுமாட்டின் கன்று, தாய்ப் பசு வரும் நேரமாகி விட்டமையால் பரபரக்கிறது. அதன் வருத்தத்தைப் போக்க அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்த ஆய்மகள், "இதோ உன் தாய் வந்து விடுவாள்' என்று சொல்கிறாள். இதுவே அந்த முதிய பெண்டிருக்கு நல்ல சகுனமாகப் படுகிறது.

அரண்மன்ையில் அரசனுட்ைய மனைவி அவனுடைய பிரிவினால் வருந்திக் கொண்டிருக்கிறாள். கார்காலம் வந்துவிட்டதே' என்று மனம் வாடுகிறாள். அவளிடம் அந்த முதிய பெண்மணிகள் சென்று. 'நல்ல வார்த்தை களைக் கேட்டோம். நல்ல சகுனம் அது. அவர் வந்து விடுவார்' என்று ஆறுதல் சொல்கிறார்கள், ஆனாலும் அரசிக்கு மனம் ஆறுதல் பெறவில்லை. பிரிவுத் துன்பத்,