பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. முல்லைப் பாட்டு - 41

தால் கண்ணtர் வடிக்கிறாள். இவள் இங்கே இப்படித் துயர் நிலையில் இருக்க, அங்கே மன்னன் எப்படியிருக் கிறான்? - - -

அவன் பாசறையில் தங்கியிருக்கிறான். காட்டாறு ஒடுகிற காட்டுப் பிரதேசம் அது. அங்கே உள்ள செடி கொடிகளையெல்லாம் அழித்து முள்ளாலே வேலி கோலி விசாலமாக அந்தப் பாடிவீட்டை அமைத்திருக்கிறார்கள். யானைகள், குதிரைகள், வீரர்கள் யாவரும் அங்கே பாளையம் இறங்கியிருக்கிறார்கள். வரிசை வரிசையாகக் கூரைக் குடிசைகள் நிற்கின்ற தெருக்கள் சில எல்லாம் புதிதாக அமைத்தவை. -

காவலாக யானைகள் நிற்கின்றன. கரும்பையும் நெற்கதிரையும் சேர்த்துக் கவளமாக அவற்றுக்குக் கொடுக்கிறார்கள். பசி இல்லாமையால் அவற்றைக் கொண்டு களிறுகள் தம் நெற்றியைத் துடைத்துக்கொள் கின்றன. பிறகு துதிக்கையில் வைத்துக் கொள்கின்றன. பாகர்கள் அங்குசத்தால் குத்தி வடமொழிச் சொற்களைச் சொல்லிக் கவளத்தை உண்ணச் செய்கிறார்கள்.

வில்லையும் துணியையும் தொங்க விட்டுக் கழிகளைக் குத்தி அங்கங்கே கூடாரம் அமைத்து அந்தப் பட்ை வீடு களில் வீரர்கள் தங்கியிருக்கிறார்கள்.

இவ்வளவு படை வீடுகளுக்கும் நடுவே நீண்ட படுதாக்களைக் கட்டிய பெரிய கூடாரத்தில் அரசன் இருக் கிறான். அங்கே கச்சுப் பூண்ட அழகிய மங்கையர் கையில் எண்ணெய்க் குழாய்களை வைத்துக் கொண்டு அங்குள்ள பெரிய விளக்குகளில் நீண்டதிரிகளை இட்டு, அணையாமல் எண்ணெயை அவ்வப்போது விடுகிறார்கள். விளக்குகளின் ஒளியால் அந்த இடம் பகல் போல இருக்கிறது. - -