பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் நூல் அறிமுகம்

மெய்க்காப்பாளர் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு உடம்பின்மேல் போர்வையைப் போர்த்துக் கொண்டு காவல் காக்கிறார்கள். அங்கே நாழிகை. வட்டில் இருக்கிறது. அங்கிருந்து கவனிக்கும் நாழிகைக். கணக்கர், 'இத்தனை நாழிகை ஆயிற்று' என்று அடிக்கடி அறிவிக்கிறார்கள். -

அங்கே அரசனுடைய பாசறை வீட்டை யவனர் கட்டியிருக்கிறார்கள். இடுப்பிலே பிரம்பு, சட்டையிட்ட உடம்பு, பார்த்தாலே பயந்தரும் தோற்றம், வலிமை இவற்றையுடைய யவனர் புனைந்த இல்லம் அது.

அங்கே திரை போட்ட அறைக்குள் பக்கத்தில் சைகையினால் கருத்தைப் புலப்படுத்தும் மிலேச்சர்கள் அருகில் நின்று காவல் காக்க, படுக்கையில் படுத்திருக். கிறான் அரசன், . ..." o -

அவனுக்குத் துளக்கம் வரவில்லை. அவன் நெஞ்சில் போர்க்களத்தின் காட்சிகள் ஒடுகின்றன. வேல் பாய்ந்த தனால் புண்ணுற்றுப் பிடியை மறந்த ஆண் யானைகள், பகைவர் படையில் உள்ள யானையின் கைகளை வெட்டித் தாம் உண்ட செஞ்சோற்றுக் கடனைக் கழித்து உயிர் விட்ட வீரர். அம்பு பாய்ந்து எதையும் உண்ணாமல் வருந்தும் குதிரைகள்-இவற்றையெல்லாம் சிந்திக்கிறான்,

அவன் கை ஒன்றைப் படுக்கையில் வைத்திருக்கிறான். மற்றொரு கையிலுள்ள கடகத்தை. முடியோடு சேர்த்துத் தலைக்கு அணையாக வைத்திருக்கிறான்,நெடுநேரம்சிந்திக் கிறான். பகைவரை நினைத்து, வில்லில் அம்பு விடும். விரலால் தன் மார்பில் உள்ள மாலையை நெருடுகிறான்.

ஊரில் அவனைப் பிரிந்து அவன் காதலி இருக்கிறாள் - ஆகவே, மிகவும் துயரத்துடன் இருக்கிறாள். என்ன