பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.'முல்லைப் பாட்டு 43

என்னவோ நினைக்கிறாள்.தானே தேற்றிக்கொள்கிறாள். வளைகளைத் திருத்திக் கொள்கிறாள். மயங்குகிறாள். பெருமூச்சு விடுகிறாள். அம்பு பட்ட மயிலைப் போல நடுங்குகிறாள். உடம்பு இளைத்ததனால் அவள் இழைகள் நெகிழ்கின்றன. .

அவள் உள்ள இடத்தில் பாவை விளக்கு எரிகிறது. எழுநிலை மாடம் அது. மழை பெய்கிறது. கூடுவாய் மூலையிலிருந்து மழை நீர் சடசட வென்று விழுகிறது. அரசனுடைய தேர்தான் வருகிறதோ என்று அந்த ஓசையைக் கவனித்துக் கொண்டு படுத்திருக்கிறாள் அரசி. - - -

இப்போது அரசன் வெற்றிச் சங்கம் முழங்க வருகிறான். - - -

அவன் வருகிற வழி முழுவதும் ஒரே குளிர்ச்சி. எங்கும் பல நிற மலர்கள். எங்கும் காடு வளம் பெற்றிருக்கிறது. முறுக்கிய கொம்பையுடைய ஆண் மான்களோடு பெண் மான்கள் துள்ளிக் குதிக்கின்றன. அரசனது தேர்க் குதிரைகளின் ஒலி அரசியின் காது நிரம்ப ஒலிக்கின்றது!

பத்துப் பாட்டின் ஐந்தாவது பாட்டாகிய முல்லைப் பாட்டில் வரும் காட்சிகள் இவை. இதைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்.

தமிழில் சொல்லப்பெறும் ஐந்து திணைகளில் ஒன்று முல்லை. தலைவன் பிரிந்திருக்கும்போது, அவன் விரைவில் வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு அவன் மனைவி வீட்டில் பொறுமையோடு இருப்பதைச் சொல்வது முல்லைத்திணையின் உரிப்பொருள். முல்லைத் திணைக் குரிய முக்கியமான நிகழ்ச்சி அது. -