பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ் நூல் அறிமுகம்

இப்படி வாழ்நாள் முழுவதும் போர் செய்வதிலே கழித்துவிட்டால், நாடு என்னாவது? அவன் ஆக்க வேலை களைச் செய்ய வேண்டாமா? இந்த எண்ணம் பல சான்றோர்களுக்கு உண்டானாலும் பாண்டியனுடைய சமர வேட்கையைத் தடுக்க அஞ்சினார்கள்.

பாண்டியன் அவைக்களத்தில் பல புலவர்கள் இருந் தார்கள். அவர்களில் தலைமை தாங்கியவர் மாங்குடி மருதனார். அவர் எப்படியேனும் மன்னனைப் ப்ோர். நாட்டத்தினின றும் திருப்ப வேண்டுமென்று எண்ணி னார். பொருள், பதவி, உலகம், இளமை ஆகியவை நிலையாதவை என்று எடுத்துக் காட்டவேண்டும் என்று முடிவு செய்தார், 782 அடிகள் அடங்கிய மதுரைக் காஞ்சி என்ற நூலைப் பாடினார். அது பத்துப் பாட்டில் ஆறாவது நூலாகக் கோக்கப் பெற்றிருக்கிறது.

மதுரையில் உள்ள அரசனுக்குக் கூறிய காஞ்சி யாதலால் அதற்கு மதுரைக் காஞ்சி என்ற பெயர் அமைந்தது. பொருளிலக்கணத்தில் புறப்பொருள் ஒரு பிரிவு. அதில் வரும் திணைகளில் காஞ்சித் திணை ஒன்று. அது பலவேறு நிலையாமையைத் சொல்வது.

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் கில்லா உலகம் புல்லிய நெறித்தே."

என்று தொல்காப்பியம் இதன் இலக்கணத்தைச் சொல் கிறது. மோட்சத்தைப் புேற வேண்டும் என்ற விருப் பத்தை உண்டாக்கும் பொருட்டாக, பொருள், இன்பம் என்றுள்ளவையும் இளமை முதலியனவும் நிலையாதன என்று சொல்லுவது' என்பது இதன் பொருள்.

பேரரசனிடம், 'இந்த ஊரும் சதமல்ல; உற்றார் சதம் அல்ல; உன் வாழ்வும் சதமல்ல' என்று நேராகக் கூறமுடியுமா? அவனுடைய முன்னோர்களின் பெருமை