பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மதுரைக் காஞ்சி

இளமைக் காலத்தில் அரியணை ஏறிய நெடுஞ் செழியனை அவனுடைய பகைவர்கள், இளையவன் ஆதலின் எளிதில் வென்று விடலாமென்று எண்ணினார் கள், சேரனும் சோழனும் குறுநில மன்னர்கள் ஐந்து பேர்களும் படை யெடுத்து வந்தார்கள். தலையாலங் கானம் என்ற இடத்தில் பெரும் போர் மூண்டது. யானைக் கூட்டத்தில் புகுந்த சிங்கக்குட்டி போல வீறுடன் பாண்டிய மன்னன் அவர்களோடு போர் செய்தான். முடிவேந்தர் இருவரும் குறுநில மன்னர்கள் ஐவரும் பெரும் படையுடன் வந்து போர் செய்தனர். அஞ்சா தெஞ்சம் படைத்த பாண்டியன் நெடுஞ்செழியன் அவ்வளவு பேர்களையும் கால் வாங்கி ஒடச் செய்தான்: சேர அரசனைச் சிறைப்படுத்தினான்.

இளமையில் அவன் பெற்ற இந்த மாபெரும் வெற்றி. யைத் தமிழுலகமே கொண்டாடியது. தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அவனைப் பாராட்டியது.

இவ்வாறு இளமையில் வீர விளையாடல் புரிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் மேலும் மேலும் பல பகை வர்களை ஒடுக்கினான். அவனுடைய தோள் தினவு தீரவில்லை, எங்கேனும் சிறு பகை தலை காட்டினாலும் உடனே அங்கே படையுடன் சென்று அடக்கினான்.