பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*48. தமிழ் நூல் அறிமுகம்

(வெற்றி முரசை உடையவரும் பெரிய வலிமை யையும் பல வேற்படையினையும் உடையவருமாகிய அரசர்கள், கரையோடு மோதி ஒலிக்கும் பெரிய கடலின் அலைகள் இட்ட மணலைக் காட்டினும் பலர்; அவர்கள் தம்முடைய ஆணை எங்கும் செல்ல, விரிந்த இடத்தை யுடைய உலகத்தை ஆட்சி செய்து, பயனில்லாமல் கழிந்தோர்.) - -

மேலே சொன்ன ஏழு அடிகளே காஞ்சித் திணை என்பதைக் குறிப்பன. புலவர் இந்த ஏழு அடிகளைச் சொல்ல 782 அடிகளால் இந்தப் பெரிய பாட்டைப் பாடினார்.

நெடுஞ்செழியனுடைய செயல்களும் பண்புகளும், பாண்டி நாட்டின் வளமும், மதுரை மாநகரத்தின் அமைப்பும், அங்குள்ளவர்கள் காலை முதல் இரவு முடிய வாழும் வாழ்க்கை முறை என்று மூன்று பெரும் பிரிவு களாக இந்தப் பாட்டில் வரும் செய்திகளைப் பகுத்துக் கொள்ளலாம். -

நெடுஞ்செழியன் நல்ல முறையில் உலகத்தை ஆண்ட மன்னர்களின் வழிவந்தவன், அகத்தியன் வாழ்ந்த பொதிய மலையைத் தனக்கு உரிமையாக உடையவன், அந்த முனிவருக்குப் பின்னே உலகம் புகழ நிற்பவன். வடிம்பலம்ப் நின்ற பாண்டியனின் வழித் தோன்றல், பாரதநாடு முழுவதும் தன் ஆணையைச் செலுத்துபவன், சாலியூர் முதுவெள்ளிலை என்ற ஊர்களைக் கொண்ட வன், தலையாலங் கானத்தில் வெற்றி கொண்டவன், கொற்கைக்குத் தலைவன் என்று நெடுஞ்செழியனின் பெருமைகள் வருகின்றன். . -

உலகத்தில் முதல் முதலாக மலை தோன்றியது என்ற உண்மையை இந்தப் பகுதியில் சொல்கிறார் புலவர்.