பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மதுரைக் காஞ்சி 49% சமலைஞாறிய வியல் ஞாலத்து”

(முதல் முதலாக மலைகள் தோன்றிய அகன்ற,

பாரத நாட்டின் எல்லையை இரண்டடிகளில் சொல் கிறார். இந்த எல்லைக்குள் உள்ள மன்னர்கள் பாண்டி யனது ஏவலைக் கேட்பார்களாம்.

  • தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாஎல்லைத் தொன்றுமொழிந்து தொழில்கேட்ப,'

(தெற்கே குமரியும் வடக்கே பெரிய மலையாகிய இமய மும் கிழக்கும் மேற்கும் கடலும் எல்லையாக உள்ள நாட்டில் உள்ளவர் பழைய உறவைச் சொல்லி ஏவல் களைக் கேட்கும்படி.)

பாரத நாட்டின் ஒருமைப்பாடு இதிலே தொனிக் கிறது. பாண்டி நாட்டின் இயல்பைச் சொல்லும் பகுதியில் ஐந்து திணைகளிலும் உள்ள வளத்தை விரித் துரைக்கிறார் புல்வர். -

இதோ மருதநிலம். எங்கும் வள் வயல்கள். அங்கே பல வகை ஒசைகள் காதில் விழுகின்றன. கரும்பாலையின் ஒசை ஒருபுறம், சேற்றில் உழும் எருது பள்ளத்திலே நின்றுவிட அதை உழுபவர்கள் உசுப்பிவிட்டு ஒட்டும் ஓசை ஒரு பக்கம்; ஓரிடத்தில் நெல்லை அளப்பவர்கள் அடிக்கும் பறையின் ஒலி, பரங்குன்றத்தில் விழாக் கொள்ளும் ஆரவாரம் ஒரு பாங்கர்; ஆடவரும் மகளிரும் கூடிக் களியாட்டம் கொள்ளும் ஓசை ஒரு பால், இப்படிப் பல ஓசைகள்.

முல்லை நிலத்தில் ஒரு பக்கத்தில் தினையை அறுவடை செய்கிறார்கள்; ஒரு பக்கம் எள் முதிர்ந்து நிற்கிறது.