பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 - தமிழ் நூல் அறிமுகம்

வேறொரு பக்கத்தில் வரகு கதிர் முற்றியிருக்கிறது. குறிஞ்சி நிலத்தில் தோரை, ஐயவி, வெண்ணெல், இஞ்சி, மஞ்சள், மிளகு ஆகியவை பயிராகின்றன,

ஒரு பகுதியில் வறண்ட பாலை நிலம் காட்சி அளிக் கிறது.

நெய்தல் நிலத்தில் கடற்கரையில் வெளிநாட்டிலி ருந்து குதிரைகள் மரக்கலங்களில் வந்து இறங்குகின்றன. மதுரைமாநகரின் வருணனை மிக விரிவாக அமைந் திருக்கிறது. முதலில் அந்த மாநகரின் ஓவியத்தைக் காண் இறோம். பெரும்பாணர்கள் வாழும் பகுதி வையைக் கரையில் அமைந்திருக்கிறது. அகழியும் மதிலும் புறத்தே விளங்க உள்ளே பெரிய தெருக்களில் மாடங்கள் ஓங்கி நிற்கின்றன. .

நாளங்காடி, அல்லங்காடி என்று இருவகைக் கடை வீதிகள் இருக்கின்றன. பகலில் வியாபாரம் தடை பெறும் இடம் நாளங்காடி இரவில் வாணிகம் நடப்பது

அல்லங்காடி. -

பல வகைக் கொடிகள் அங்கே காட்சியளிக்கின்றன: கோயில்களுக்கு விழா எடுக்க உயர்த்திய கொடிகள் போரில் வென்றதைக் காட்டும் வெற்றிக் கொடிகள், விற்கும் இடம் இது என்று காட்டும் கொடிகள், கல்வி யாளர் உயர்த்திய கொடி, தியாகக் கொடி, தவத்தினர்

நாட்டிய கொடி இப்படிப் பல கொடிகள்.

நாளங்காடியில் பூ, சுண்ணம், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றை விற்கிறார்கள். . - -

இறைவனுக்குத் திருவிழா நடக்கிறது. ஏழுநாள் நடக்கிறது. ஏழாம் நாள் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று ஒரே ஆரவாரம்.