பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மதுரைக் காஞ்சி 51.

பெளத்தப் பள்ளியும் அந்தணர் உறைவிடமும், சமணப் பள்ளியும், அறங்கூரவையமும் அங்கங்கே உள்ளன. காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சரும்,பண்டங் களை விற்கும் வணிகரும், புரோகிதரும், சேனைத் தலைவ ரும், தூதர்களும், ஒற்றர்களும் நம் கண்ணிற்படுகின்றனர்.

எத்தனைவிதமான கலைஞர்கள் சங்கு கடைவார், இரத்தின வேலை செய்பவர், பொன்நகை செய்பவர்கள். பொன்னை நோட்டம் பார்ப்பவர்கள், ஆடையை விற்ப வர்கள், செம்பு வேலை செய்வார், பூவையும் புகையையும் ஆயும் மாக்கள், சித்திரகாரர்கள் இவர்கள் அங்கங்கே தெருக்களில் இருக்கிறார்கள். ---

இந்த நகரில் மக்கள் வாழ்க்கை அந்தி முதல் காலை வரையில் எவ்வாறு நடக்கிறது என்பதையும் புலவர். விரிவாகக் காட்டுகிறார். -

இரவின் முதல் சாமத்தின் நிகழ்ச்சிகள் பலப்பல. பெண்கள் பூவும் சாந்தும் புனைகின்றனர். பரத்தையர் இயல்பு பல அடிகளில் வருகிறது. புதல்வரை ஈன்ற மகளிர், பலர் காணாமல் இந்த முதல் சாமத்தில் நீராடு கிறார்கள். சூல் மகளிர் பூசாரிச்சியோடு சென்று இறை வனுக்கு நைவேத்தியத்தைப் படைக்கிறார்கள். சிலர் குரவைக் கூத்தாடுகிறார்கள்.

இப்படியே இரண்டாம் சாம நிகழ்ச்சிகளும் மூன்றாம் சாம நிகழ்ச்சிகளும் வருகின்றன. மூன்றாம் சாமத்தில் கள்வர்கள் வராமல் காக்கும் காவலர்களின் நிலையைச் சொல்கிறார் புலவர். ‘. -

கள்வர்கள் கல்லையும் மரத்தையும் வெட்டும்வாளைக் கையிலே வைத்திருக்கிறார்கள். காலில் செருப்பை அணிந்திருக்கிறார்கள். கரிய கச்சை இடையில் அணிந்