பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் நூல் அறிமுகம்

துள்ளனர். நூலேணியை இடுப்பில் சுற்றியிருக்கிறார்கள். பூமியை அகழும் கன்னக்கோலை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வருவதைக் கவனமாகக் காவலர் பதுங்கிப். பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,

சதுஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்,

அறிக்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த நூல்வழிப் பிழையா துணங்குநுண் தேர்ச்சி ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்'

என்று அவர்களின் திறமையைச் சொல்கிறார். களவு நூலும் காவல் நூலும் நன்கு அறிந்தவர் அவர்கள்.

விடியற் காலம் தாதுண் தும்பி பூவில் முரன்றாற். போல, 'ஓதல் அந்தணர் வேதம் பாடு'கிறார்கள். யாழ் வல்லவர்கள் மருதப் பண்ணைப் பாடுகிறார்கள். கதவுகள் திறக்கும் ஓசை காதில் விழுகிறது. இன்னும் பல பல நிகழ்ச்சிகள். -

இரவில் துயில் கொண்ட மன்னன் பள்ளி யெழு கிறான். நீராடிய பின் சந்தனத்தைப் பூசிக் கொண்டு முத்து மாலையை அணிந்து மலர் மாலையையும்புனைந்து மோதிரம் கடகம் ஆகியவற்றை அணிந்து, மெல்லிய, துகிலை உடுத்துக் கொள்கிறான். பல வகையான வீரச் செயல்களைச் செய்த வீரர்களை அழைத்து வாருங்கள்! பட்டி மண்டபத்தில் உள்ளாரையும் அறங்கூரவையத் தாரையும் அழைத்து வாருங்கள்! பானர் வருக!' பாட்டுப் பாடும் மகளிர் வருக! புலவர்கள் வருக! கூத்தர்கள் வருக!' என்று எல்லோரையும் அழைத்து வரச் சொல்கிறான். அவரவர்களுக்கு வேண்டிய பரிசு களைக் கொடுக்கிறான்.குதிரை, யானை, தேர் ஆகியவற்.

றையும் பொன்னையும் வழங்குகிறான்.