பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் நூல் அறிமுகம்

மேற்கட்டியில் மெழுகுச் சீலையில் அழகிய படங்களை எழுதி யிருக்கிறார்கள். சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருப்பதாக ஒரு படம். அதைப் பார்த்துப் பெரு மூச்சு எறிகிறாள். தன் கண்ணில் துளிக்கும் நீரை விரலால் வழித்துத் தெறிக்கிறாள்.இப்படித் தனிமைத் துன்பத்தோடு இருக்கிறாள் ப்ாண்டியன் மனைவி. -

உரோகிணி நினைவனள் நோக்கி கெடிதுஉயிரா

மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி செவ்விரல் கடைக்கண் சேர்த்துச்சில தெறியாப்

புலம்பொடு வதியும் கலங்கிளர் அரிவை'

என்று அவளைச் சொல்கிறார் புலவர்.

அரசன் எப்படி இருக்கிறான்?

அவன் பாசறையில் இருக்கிறான். அங்கங்கே பல கூடாரங்கள். தன்னுடைய கூடாரத்திலிருந்து மன்னன் வெளியே வருகிறான். யானைகளைக் கொன்று மார்பிலே பட்ட விழுப்புண்களோடு படுத்திருக்கும் வீரர்களைப் பார்க்கும் பொருட்டுப் புறப்பட்டு வருகிறான்.

அங்கே பெரிய விளக்குகள் எரிகின்றன. வாடைக் காற்று வீசுவதால் சுடர்கள் தெற்கு நோக்கிச் சாய்ந்து எரிகின்றன. முன்னாலே சேனாபதி தன் கையில் வேப்ப மாலையை அணிந்து வேலை எடுத்துக்கொண்டு செல் கிறான். அவன் புண்பட்ட வீரர்களை இன்னார் இன்னார் என்று அரசனுக்குக் காட்டிக்கொண்டு செல்கிறான். போகும் வழி தெரு மாதிரி இருக்கிறது. இரண்டு பக்கமும் கூடாரங்கள். அங்கே உள்ள குதிரைகள் மழை துளி வீசுவதனால் உடம்பை உதறிக்கொள்கின்றன. அரசன் மேலே போட்டிருக்கும் உத்தரீயம் நழுவுகிறது. அதை