பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நெடுநல்வாடை - ፴፪

வில்லை. கும்மட்டி அடுப்பில் உள்ள நெருப்பையே சாப் பிடுகிறார்கள்! அவ்வளவு கொதிக்கக்கொதிக்க உணவை உண்ணுகிறார்கள். யாழ் வாசிக்கும் மகளிர் குளிரால் சுருதி கலைந்த நரம்புகளைத் தம் மார்பில் தடவிச் சூடு ஏற்றிச் சுருதி சேர்க்கிறார்கள். காதலரைப் பிரிந்த பெண் கள் வருந்தும்படி கூ தி ர் க | ல ம் வந்து குடி கொண்டிருக்கிறது. -

பாண்டியன் மனைவி கட்டிலில் படுத்திருக்கிறாள். பெரிய சக்கரவர்த்திக்கு ஏற்றபடி கட்டிய அர்ண்மனை அது.அதன் வாயிலில் கொடியை உயர்த்திய யானை புகும்; அவ்வளவு உயரமானது. அரண்மனை முற்றத்தில் கவரி மானும் அன்னங்களும் உலவுகின்றன. குதிரைகள் புல்லை உண்ணாமல் குதப்புகின்றன. கூடுவாய் மூலைகளில் மழை நீர் விழுகிறது. மயில் அகவுகிறது.

அந்த அரண்மனையில் யவனர் இயற்றிய பாவை விளக்குகளில் அடிக்கடி நெய் பெய்து திரியை நிமிண்டி விடுகிறார்கள். பாண்டிய அரசனை அல்லாமல் வேறு யாரும் புகாத அந்தப்புரத்தில் அரசி இருக்கிறாள். தந் தத்தால் செய்த கால்களை உடைய கட்டிலல் படுத்திருக் கிறாள். மென்மையாக விரித்த மெத்தென்ற படுக்கையில் அதிக அணிகளைப் புனையாமல் வண்ணம் தீற்றாத ஒவியத்தைப் போல அவள் படுத்திருக்கிறாள்.

அவளுடைய அடிகளைச் சில மகளிர் வருடிக் கொண் டிருக்கிறார்கள். செவிலித் தாய்மார் பல கதைகளையும் நொடிகளையும் சொல்லி நேரத்தைப் போக்க முயலு: கிறார்கள். இதோ விரைவில் உன் கணவர் வந்துவிடு வார்' என்று தேற்றுகிறார்கள். ஆயினும் அவள் ஆறுதல் பெறவில்லை; வருந்துகிறாள்; அழுகிறாள். கட்டிலின்