பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. தமிழ் நூல் அறிமுகம்

மிகுதியால் தரையிலே விழுகின்றன. பசு மாடுகள் கன்று: களை உதைக்கின்றன. மலை முழுவதுமே குளிரும்படி வீசுகிறது, வாடைக் காற்று.

முசுண்டைப் பூவும் பீர்க்கம்பூவும் செடிகளில் மலர் கின்றன. கொக்கும் நாரையும் ஈர வெண்மணலில் தத்தித் தத்தி நடந்து மீன்களைக் கவ்வுகின்றன. மீன்கள் நீரின் எதிரே செல்கின்றன. சிறு துளிகளை மேகங்கள் வீசு கின்றன. நெல்லின் கதிர் வளைந்து நிற்கிறது. கமுகில் பாக்கு முற்றுகிறது.

இத்தகைய கூதிர் காலத்தில் அந்தப் பழைய நகரத்தில் ஆறுகள் கிடந்தாற் போன்ற தெருக்களில் வலிமையுடைய மிலேச்சாகள் மதுவை அருந்திவிட்டு மழைத் துாறலையும் பொருட்படுத்தாமல் திரிகிறார்கள். -

பொழுதே தெரியவில்லை. என்றாலும், அழகிய மக. ளிர் பூந்தட்டில் வைத்திருந்த பிச்சிப் பூ மலர்வதைக் கண்டு மாலை வந்துவிட்டது என்று அறிந்து கொள்கிறார்கள். விளக்கை ஏற்றி இறைவனைத் தொழுகிறார்கள். .

வீட்டினுள் புறாக்கள் ஆணும் பெண்ணும் ஒன்றனை ஒன்று பாராமல் கொடுங்கைப் பலகைகளில் இருக்கின்றன. உணவுண்ண அவை வெளியில் போகவில்லை. வடநாட்டி விருந்து வந்த சந்தனக் கல்லுக்கும் தென் பொதிகை யிலிருந்து வந்த சந்தனத்துக்கும் இப்போது வேலையில்லை; அவை சும்மா கிடக்கின்றன. பெண்கள் தம் கூந்தலில் மாலைகளைச் சூடாமல் சில மலர்களை மட். டும் அணிந்து கொள்கின்றனர். நெருப்புக் கும்மட்டியில் அகில் முதலியவற்றை இட்டுப் புகைக்கிறார்கள். விசிறி களை உறையிலிட்டு மாட்டியிருக்கிறார்கள். அவற்றில் சிலந்தி வலை பின்னியிருக்கிறது. கதவுகளை இறுகச் சாத்தியிருக்கிறார்கள். யாரும் தண்ணீரைக் குடிக்க