பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நெடுநல்வாடை 55

உணர்த்துவதாக இருந்தால் அது அகத்திணையிற் சேராமல் புறத்திணை ஆகிவிடும். ஆகவே, இதுவும் புறத்திணைகளுள் வாகைத் திணையில் கூதிர்ப் பாசறை என்னும் துறையைச் சார்ந்தது என்று உரையாசிரியர் இலக்கணம் வகுத்திருக்கிறார். -

வாடை வீசும் கூதிர் காலத்தில் அரசன் மனைவியைப் பிரிந்து பாசறையில் இருக்கிறான். அந்தக் காலம் அவ ளுக்கு மிக நீண்டதாக இருக்கிறது. ஆதலால் அது நெடு வாடை. மனைவியைப் பற்றிய நினைவே இல்லாமல் வெற்றி பெறும் நோக்கோடு போக உணர்ச்சியை வென்றுள்ள அரசனுக்கு அது நல்ல வாடைக் காலமாக இருக்கிறது. அதனால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயர் வந்தது. பாட்டின் நடுவில், "வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கி' என்று வாடைக் காற்று வீசுவதைப் .பற்றிய செய்தி வருகிறது.

கவிதைச் சுவை நிரம்பிய பாட்டு இது. உள்ளதை ஒவியமாகக் காட்டும் தன்மை நவிற்சியே பாட்டு முழு வதும் ஊடுருவி நிற்கிறது.வாடைக் காலத்தின் வருணனை முதலில் வருகிறது. பிறகு பாண்டியனுடைய மனைவி பிரிவுத் துயரால் அமளியில் படுத்தபடியே வருந்தும் நிலையைக் காட்டுகிறார் புலவர். இறுதியில் பாசறை .யில் அரசன் இருக்கும் கோலத்தைச் சொல்கிறார்.

வாடைக் காற்று வீசும் இந்தக் கூதிர் காலத்தில் மக்களும் விலங்குகளும் குளிரினால் நடுங்குகிறார்கள். மக்கள் கைகளை நெருப்பிலே காய்ச்சிக் கொண்டு கன்னத் தில் வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பற்கள் தாளம் இடுகின்றன. ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப் போக வில்லை. குரங்குகள் கையை முடக்கிக் கொண்டு குந்தி, யிருக்கின்றன. மரத்திலே உள்ள பறவைகள் காற்று