பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - தமிழ் நூல் அறிமுகம்

இறுதியில் 'ஆரியஅரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு' என்ற குறிப்பு இருக்கிறது. தமிழ் என்றது, தமிழுக்கே சிறப்பாக அமைந்த இலக்கிய மரபை. r

ஐந்து வகையாக அகப் பொருளைப் பிரிப்பார்கள் அதனால் அதை அகனைந்திணை என்று சொல்வது புலவர் களின் வழக்கம். அந்த ஐந்து திணைகளில் முதலாவது, குறிஞ்சி. புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய பொருளைச் சொல்வது அது; அதாவது, காதலனும் காதவியும் இணைந்து இன்புறுவதையும் அதறகுக் காரண மாக நிகழும் செயல்களையும் சொல்வது.

குறிஞ்சிப் பாட்டு ஒரு காதலியைக் காதலன் கண்டு அன்பு செய்யும் கதையைச் சொல்கிறது. களவுக் காதலில் ஈடுபட்ட அந்தப் பெண் தன் காதலனைச் சில நாள் சந்திக்க முடிவதில்லை. அதனால் அவள் வருந்துகிறாள். அவனுடன் களவிலே தொடர்பு கொண்டிருத்தலை யாரேனும் அறிந்தால் என்ன செய்வது என்று அஞ்சுகிறாள். இவற்றால் அவள் உடம்பு மெலிகிறது. அது கண்டு தாய் அவள் மெலிவுக்குக் காரணம் என்ன வென்று குறி சொல்பவர்களிடம் கேட்கிறாள்.

அந்தச் சமயத்தில் அந்த இளம் பெண் தன் நிலையைத் தோழிக்குச் சொல்ல, தோழி காதலியை வளர்த்தசெவிலித் தாய்க்கு, அந்தப்பெண் ஒரு கட்டிளங் காளையிடம் காதல் கொண்டிருப்பதையும் அதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளையும் சொல்கிறாள். இவ்வாறு சொல்வதை 'அறத்தொடு கிற்றல் என்று இலக்கணம் சொல்லும். அறம் என்பது கற்பு. காதலியின் கற்புக்குத் துணையாக நின்று உண்மையை வெளிப்படுத்துவதால் அந்தப் பெயர் வந்தது. - . . -