பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ே தமிழ் நூல் அறிமுகம்

தின்ைப்புனத்தில் ஒரு பரணின் மேல் இருந்து தழல், தட்டை, குளிர் ஆகிய கருவிகளைக் கொண்டு கிளிகளை ஒட்டினார்கள். பிறகு மலையிலிருந்து வரும் அருவியில் நீராடி மனம் போனபடி பாட்டுப் பாடிக் கூந்தலை நன்றாகப் பிழிந்து ஈரம் புலர்த்திக் கொண் டார்கள். பின்பு அங்கே உள்ள பலவித மலர்களைப் பறித்துப் பாறையில் பரப்பினர். இடையில் உடுக்கும் தழையாடையைக் கட்டி அணிந்தும், மாலை கட்டி அணிந்தும், தலையில் பூவை அணிந்தும் ஒர் அசோக மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது கட்டிளங்காளை ஒருவன் வந்தான். மலர்களை அணிந்து சந்தனத்தைப் பூசிக்கொண்டு அகன்ற மார்பில் மாலையும் அணிகலனும் விளங்க வந்தான். அவன் கையில் வில்லும் அம்பும் இருந்தன. அவனுடன்

சில வேட்டை நாய்கள் வந்தன.

அந்த நாய்களைக் கண்டு அஞ்சிப் பெண்கள் எழுந்து ஒடத் தலைப்பட்டார்கள். அப்போது அவன் அவர்களை அணுகி இனிய வார்த்தைகளைக் கூறி. 'நான் வேட்டை யாடித் துரத்திய விலங்குகள் இங்கே வந்தனவோ?’ என்று கேட்டான். அவர்கள் விடை கூறவில்லை. "அவற்றைப் பற்றிச் சொல்லாவிட்டாலும் என்னோடு பேசுவது கூடப் பழியோ?" என்று கூறி, அவர்கள் மேல் மொய்க்கும் வண்டுகளை ஒட்டி, உடன் வந்த நாய்களையும் அடக்கி அவர்கள் சொல்லைக் கேட்கும் ஆவலோடு நின்றான்.

அப்போது மதம் பிடித்த யானை ஒன்று அங்கே ஒடி வந்தது. அதைக் கண்ட பெண்கள் இருவரும் அஞ்சிச் சேய்வதொன்றும் அறியாமல் அந்த இளைஞனுக்கருகில் சென்று ஒட்டி நின்று நடுங்கினார்கள். அவன் அம்பினால் அந்தக் களிற்றை எய்து வெருவி ஓடும்படி செய்தான்.