பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குறிஞ்சிப் பாட்டு 65°

பிறகு அந்தப் பெண்கள் அங்கே உள்ள காட்டாற்றில் பாய்ந்து நீராடினார்கள். கால் தளர்ந்து ஆற்றோடு போனார்கள். அப்போது அவர்களை மீட்டுக் கரையில் விட்டான். அந்த வீரன், இளம் பெண்ணைத் தேற்றி, 'உன்னுடைய இன்பத்தை நான் நுகர்வேன்' என்று சொல்லி நெற்றியை நீவி, தோழியைப் பார்த்துச் சிரித்தான்.

பிறகு அந்தப் பெண்ணைத் தழுவி, விருந்தினரை - ஒம்பிப் பிறகு எஞ்சியதை உன்னோடும் உண்ணுவது, உயர்ந்த அறமாக இருக்கும்' என்று சொல்லி, 'நான் உன்னை என்றும் பிரியேன்" என்று உறுதிமொழி கூறினான். அவ்வாறு சொல்லி ஆணையிடும் அடையாள மாகத் தண்ணிரை எடுத்து ஒரு கை குடித்தான்.

இவ்வாறு யானை காரணமாக அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டாயிற்று. இதைக் களிறு தரு : புணர்ச்சி என்பார்கள். -

அந்தப் பகல் முழுவதும் அவன் அவளோடு இருந்து இன்புற்றான். மாலைவந்தது. பெண்ணே, நீ வருந்தாதே, உன்னுடைய பெற்றோர்கள் திருமணம் செய்துகொடுக்க, உன் கையைப் பற்றி நாடெல்லாம் நாம் கணவனும் மனைவியுமானோம் என்பதை அறியும்படி நன்மணம் செய்து கொள்வோம். சிறிது காலம் கலங்காமல் இரு' என்று சொல்லி அவர்களை ஊரளவும் கொண்டு வந்து, விட்டுச் சென்றான்,

அது முதல் ஒவ்வொரு நாளும் இரவில் அவன் அவளை எண்ணி வீட்டின் புறத்தே வந்து அவளைச் சந்தித்து அவளோடு அளவளாவினான். அப்படி வரும்