பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் நூல் அறிமுகம்

போது ஊர் காவலர் வந்தாலும், நாய் குரைத்தாலும், தாய் துயில் எழுந்தாலும், நிலா ஒளி வீசினாலும் அவளைச் சந்திக்க முடியாமல் போய்விடும். அவ்வாறு முடியா விட்டாலும் அவன் வெறுக்காமல் மறுபடியும் மறுபடியும் வந்தான். இளமை மிடுக்குடுடையவன், வளம் மிக்கவன் அவன். - -

அவன் வருவதில் உண்டாகும் இன்னல்களை நினைந்து அவன் காதலி கண்ணிர் விடுகிறாள். அவர் வரும் காட்டு வழியில் விலங்குகளும் பாம்பு முதலியனவும் ஆறும் குழியும் இருக்குமே!’ என்று எண்ணும்போதெல்லாம் அழுகிறாள்.

இந்த வரலாற்றைத் தோழி சொல்லி, அந்த விரனுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செவிலித் தாய்க்கு உண்டாக்குகிறாள். -

களவுக் காதலில் நிகழும் பல வகை நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாகப் பின்னிச் சொல்கிறது. இந்தப் பாட்டு, கவிச்சுவை செறிந்ததாகவும் அமைந்திருக்கிறது.

அணிகலன்கள் சிதைந்தால் செப்பஞ் செய்யலாம். ஒழுக்கம் பிறழ்ந்தால் நேர் படுத்த முடியுமா?' என்று தோழி சொல்லும்போது, காதலியின் கற்பொழுக்கம் நிலைநிற்க வேண்டுமானால் காதலர் இருவரையும் ஒன்று படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறாள்.

"முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலம்கெடின் புணரும்: -

குரைய: அசை; பொருள் இல்லாத சொல். கலம் - பாத்திரம், காட்சி - அறிவு. - - -