பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குறிஞ்சிப்பாட்டு 67.

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அங்கிலை எளிய என்னார் தொன்மருங்கு அறிஞர்.'

பெண்கள் இருவரும் பாறையின்மேல் குவிக்கும் மலர்களின் பெயர்கள் அடுக்கடுக்காக வருகின்றன. 35 அடிகளில் 99மலர்களைச் சொல்கிறார். இதைக் கேட்ட ஆரிய அரசன் பிரகத்தன், அடே யப்பா! எத்தனை மலர்கள்!' என்று வியந்திருப்பான். குறிஞ்சித் திணை யைப் பாடுவதில் வல்லவராகிய கபிலர் சிறிதும் சிரமம் இன்றி ஆற்றொழுக்காக அந்த மலர்கள் அடுக்குகிறார்.

வருகிற வீரனும் மலர்களைப் புனைந்து கொண்டு வருகிறான். அவனுடைய அழகை அவை மிகுதியாக்கு கின்றன. 'தமிழர் மலர்களின் அழகை எப்படி யெல்லாம் நுகர்கிறார்கள்!' என்று பிரகத்தன் வியந்திருப்பான்.

மாலையின் ഖന്ദ്രങ്ങബുമ மிக அழகாக இருக்கிறது.

‘ஏழு குதிரை கட்டிய தேரில் ஊர்ந்து கதிரவன் மலையிலேயே சென்று மறைகிறான். மான் கூட்டம் மரத்தின் அடியிலே வந்து கூடுகின்றன. ஊது கொம்பைப் போல ஒலிக்கும் ஆண் அன்றில் பனையின் மடவில் இருந்து பெண் அன்றிலை அழைக்கிறது. பாம்பு தன் மாணிக்கத்தை உமிழ்ந்து அதன் ஒளியில் இரை மேயப் புறப்படுகிறது. இடையர்கள் புல்லாங்குழலில் ஆம்பல் என்னும் பண்ணை ஊதுகிறார்கள். ஆம்பல் மல்ர்கள் மலர்கின்றன. அந்தணர்கள் . அந்திக்குரிய கடன்களைக் செய்கிறார்கள். செல்வம் நிரம்பிய மனைகளில் மகளிர் விளக்கை ஏற்றுகிறார்கள். காட்டில் உள்ள வேடர்கள் பரணின்மேல் தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி, யானை முதலியன வராமல் எரிக்கிறார்கள். மேகம்