பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ் நூல் அறிமுகம்

மலையைச் சூழ்ந்து கறுக்கிறது. காட்டிலுள்ள விலங்குகள் முழங்குகின்றன. பறவைகள் கூட்டுக்குள் ஆரவாரிக் கின்றன’

காட்டு வழியில் உள்ள இன்னல்களை யெல்லாம். நினைந்து, அவர் வரும் வழியில் இந்த இடையூறுகள் இருக்குமே" என்று எண்ணிக் காதலி வருந்துகிறாள். அவள் எண்ணிப் பார்க்கும் இடையூறுகள் எவை. தெரியுமா?

மலைக் குகையில் உள்ள புலிகள், யாளிகள், கரடிகள் காட்டுப் பசுக்கள், யானை, இடி, காட்டுத் தெய்வம்,இரை தேடித் திரியும் பாம்பு, கழியில் திரியும் முதலை வகைகள், வழிப்பறிக்காரர், கொலை செய்யும் இடம், வழுக்கு நிலம், வழி தெரியாத இடங்கள், பிசாசு, மலைப்பாம்பு முதலிய வற்றை எண்ணி எண்ணி வெதும்புகிறாள்.

இவ்வாறு களவுக்காதற் கதையை இயற்கை நிலைக் களத்தே வைத்துக் காட்டும் குறிஞ்சிப் பாட்டு, தமிழ், மரபைத் தெளிவாக விளக்குகிறது.