பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பட்டினப்பாலை

பண்டைக்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற். றவன் கரிகாலன். அவனுடைய பெருமையைப் பத்துப் பாட்டில் உள்ள இரண்டு நூல்கள் கூறுகின்றன: ஒன்று, பொருநர் ஆற்றுப்படை, மற்றொன்று பட்டினப்பாலை.

பத்துப் பாட்டில் ஒன்பதாவதாகக் கோக்கப் பெற்ற பட்டினப்பாலை 301 அடிகளை உடையது; கடியலுர் உருத்திரங் கண்ணனார் பாடியது இந்த நூலில் வஞ்சியடி களும் ஆசிரிய அடிகளும் கலந்து வருகின்றன. மிகுதியாக வஞ்சியடிகள் இருப்பதனால் இதற்கு வஞ்சி நெடும்பாட்டு என்ற பெயரும் உண்டு.

இதைப் பாடியதற்காகக் கரிகாற் பெருவளத்தான் உருத்திரங் கண்ணனாருக்குப் பதினாறு லட்சம். பொன் பரிசு அளித்தானாம்; பதினாறு கோடி என்று சொல்வதும் உண்டு.

பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம். பிரிவைப் பற்றிச் சொல்லும் அகத்துறைப் பாட்டைப் பாலைத் திணையைச் சார்ந்தது என்று வகுப்பர் புலவர் தன் காதலியைப் பிரிவதற்கு மனம் இன்றி, "நான் இவளைப் பிரிந்து போக மட்டேன்' என்று சொல்லும் முறையில் அமைந்தது இந்தப் பாட்டு. 'காவிரிப்பூம்பட்டினத்