பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ் நூல் அறிமுகம்

தையே பெற்றாலும் இவளைப் பிரிய மாட்டேன். நான் போகும் வழியில் உள்ள பாலை நிலம் கரிகால் பெருவளத் தானுடைய வேலைவிடக் கொடுமையை உடையது. என் காதலியின் தோள்கள் அவனுடைய செங்கோலினும் குளிர்ச்சியானவை. ஆகவே, நான் பிரிந்து செல்ல மாட் டேன்' என்று காதலன் சொல்லுகிறான்.

  • முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்

வார் இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே...... திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம்; அவன்

கோலினும் தண்ணிய தடமென் தோளே.'

(முட்டாச் சிறப்பு - அழியாத பெருமை. வயங்கிழை - தலைவி. தெவ்வர்க்கு - பகைவரை அழிக்கும் பொருட்டு. ஒக்கிய ஏந்திய. கானம் - பாலைநிலம். தண்ணிய - குளிர்ச்சியை உடையன (

இந்த அடிகள் அந்தச் செய்திகளை உணர்த்தும்.

பிரிவு பற்றிக் கூறுவதானாலும், பட்டினத்தின் சிறப்பை எடுத்து விரித்து உரைப்பதனாலும் இதற்குப் பட்டினப்பாலை என்ற பெயர் வந்தது. -

இது அகத்துறைப் பாட்டு ஆயினும், காதல் சம்பந்த மான செய்தி வரும், வார் இருங்கூந்தல் வயங்கிழை ஒழிய, வாரேன் வாழிய நெஞ்சே, அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே என்ற மூன்று அடிகளைத் தவிர மற்ற எல்லாம் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை

யும் கரிகாலனுடைய பெருமையையும் உரைப்பவை.

முதலில் சோழ நாட்டின் வளத்தை விரிக்கிறார் புலவர். பிறகு காவிரிம்பூம்பட்டின்த்தின் சிறப்பு