பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பட்டினப்பாலை ፶1

வருகிறது. அப்பால் கரிகாலன் अग्र- கட்டில் ஏறின வரலாறும் பகைவரோடு பொருதுவென்ற வீரச் சிறப்பும் விரிவாக உள்ளன. • , .

வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரி சோழ நாட்டுக்கு வளம் ஊட்டுகிறது. விளைவு அறாத கழனி களில் கரும்பு, தென்னமரம், குலைவாழை, கமுகு, மஞ்சள் மாமரம், பனைமரம், சேம்பு, இஞ்சி முதலியவை விளை கின்றன. பகையறியாத நாடு சோழ நாடு. காயப் போட்ட தானியங்களைக் கொத்தும் கோழிகளை ஒட்டு வதற்காக மகளிர் தம் காதில் அணிந்த குழைகளைக் கழற்றி வீசுகிறார்கள். அவை சிறு குழந்தைகள் தள்ளும் . மூன்று சக்கர வண்டிகளைத் தடுக்கின்றன. பல சிறிய ஊர்கள் அடுத்தடுத்து உள்ளன. -

காவிரிப்பூம்பட்டினத்தை அணுகும் போது அங்கே கழிகள் இருக்கின்றன. உப்பை விற்றுவிட்டு நெல்லை ஏற்றி வந்த படகுகளைக் கட்டியிருக்கிறார்கள். தோப்பு களும் பூஞ்சோலைகளும் காட்சி தருகின்றன. பொய்கை களும் இரண்டு பெரிய ஏரிகளும் உள்ளன. அப்பால் திண்ணிய மதில் இருக்கிறது.

நகருக்குள் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த மாளிகைகள் உள்ளன. அன்ன சத்திரங்களைக் காண் கிறோம். தவம் செய்வோர்களின் பள்ளிகளையும், முனிவர் வேள்வி புரியும் ஆசிரமங்களையும், காளி கோயிலையும் பார்க்கிறோம்.

நகர்ப்புறங்களில் பரதவர் வாழ்கிறார்கள். பலர் பாவம் போகக் கடல் நீரில் ஆடுகிறார்கள்; பிறகு மாசு நீங்க நன்னீரில் குளிக்கிறார்கள்.