பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ் நூல் அறிமுகம்

நகருக்குள் சொர்க்கத்தை ஒத்த மாடங்களில் பாடல் களைக் கேட்டும், நாடகங்களைக் கண்டும் இன்புறுகின் றனர் பலர். கள்ளை விட்டு மதுவை நுகர்கின்றனர். பட்டை அகற்றி அதனினும் உயர்ந்த துகிலை உடுக்கின் றனர். ஆண்களும் பெண்களும் ஒன்றி இன்புறுகின்றனர்.

கடலுக்கு அருகில் பண்டசாலை இருக்கிறது. அங்கே ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகின்றன. ஏற்று மதியாகும் பண்டங்களுக்கும் புலிப் பொறியைப் பொறித்து அனுப்புகிறார்கள். அங்கே சுங்கங் கொள் வோர் நடுவு நிலைமை தவறாமல் தம் கடமையைச் செய் கிறார்கள். -

தெருக்களில் பல வகையான கொடிகள் இருக் கின்றன. முருகனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விழா எடுக்க ஏற்றியிருக்கும் கொடிகள் ஒரு பால் அசை கின்றன. இல்லுறை தெய்வம் மகிழ மனைவாசலிற் கட்டிய கொடிகள், கடைத் தெருவின் இரண்டு பக்கங். களிலும் உள்ள கொடிகள், இன்ன பண்டம் விற்கப்படும் என்பதைப் புலப்படுத்தும் கொடிகள், ஆசிரியர்கள் வாது. செய்யக் கருதிக் கட்டிய கொடிகள், கப்பலில் கட்டிய, கொடிகள், கள்ளுக் கடையில் கட்டிய கொடிகள்இவ்வாறு பல கொடிகள் அங்கே செறிந்து விளங்கு, கின்றன. . . . *

கடல் வழியாக வந்த குதிரைகளும் மிளகு மூட்டை களும், வட திசையிலிருந்து வந்த மாணிக்கமும் பொன் னும், பொதியில் மலையிலே விளைந்த சந்தனமும்அகிலும் தென் கடலில் தோன்றிய முத்தும், கீழ் கடலிற் பிறந்த பவளமும், கங்கையில் விளைந்த பொருள்களும், ஈழத்தி லிருந்து வந்த உணவுப்பொருளும், காழக நாட்டிலிருந்து,