பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பட்டினப்பாலை 73

வந்தவையும், வேறு நாடுகளிலிருந்து வந்த அரிய பெரிய பொருள்களும் குவிந்து கிடக்கின்றன. பல மொழிகளைப் பேசும் பல நாட்டு மக்களும் கலந்து உலவுகிறார்கள்.

வியாபாரம் மிகுதியாக உள்ள இந்த மாநகரில் பல வணிகர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கொலை, களவு ஆகிய பாவங்களைச் செய்பவர்களுக்குப் பொருள் தந்தும் நல்லுரை வழங்கியும் அந்தக் கொடுந்தொழில்களைச் செய் யாமல் இருக்கச் செய்கிறார்கள். தமக்குரிய வேள்வியைச் செய்கிறார்கள். தேவர்களை வழிபடுகிறார்கள். பசுக் களையும் எருதுகளையும் பேணிக் காக்கிறார்கள். அந்தணருக்கு நலம் செய்கிறார்கள். தானம் பண்ணு கிறார்கள். . . . . -

தம் பண்டங்களையும் பிறர் பண்டங்களையும் நன்கு ஆராய்ந்து நடுநிலை பிறழாமல் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். தாம் கொடுக்கும் பண்டங்களின் மதிப்புக்கு அதிகமான விலையை வாங்காமலும், அதிக விலை வாங்கிப் பொருளைக் குறைவாகக் கொடுக்கா மலும் இத்தனை லாபம் என்று வேளிப்படையாகச் சொல்வி விற்பனை செய்கிறார்கள்.

இவ்வாறு காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு மேலே கரிகாலனைப் பற்றிச் சொல்கிறார்

புலவர்.

கரிகர்லன் இளம் பருவத்தில் அரசுரிமையைப் பெற்ற்ான். அப்பருவத்திலேயே பகைவர்மேற் ப.ை யெடுத்துப் போர் செய்து வென்றான். 'மலைகளைப் பறிப்பேன்; கடலைத் தூர்ப்பேன்; தேவருலகத்தை இங்கே கொண்டு வருவேன்; காற்றைத் திசை மாற்றுவேன்' என்று மிடுக்காகப் பேசினான். ஒளி நாட்டார், அருவாள நாட்டார், வடநாட்டு அரசர், குடநாட்டு மன்னர் ஐம்பெரு வேளிர் ஆகியவர்களை அடிப்படுத்தினான்.