பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மலைபடுகடாம்

திருவண்ணாமலைக்கு மேற்கே செங்கம் என்ற ஊர் இருக்கிறது. அதன் பழம் பெயர் செங்கண்மா. அங்கே பழங்காலத்தில் நன்னன் என்ற குறுநில மன்னன் வாழ்ந் திருந்தான். அவனுடைய தந்தைக்கும் நன்னன் என்றே ப்ெயர். குறுநில மன்னனை வேள் என்றும் சொல்வார்

&©y . . "

அந்த வேளின் பெருமையைச் சொல்வது, பத்துப் பாட்டின் இறுதி நூலாகிய மலைபடுகடாம் என்பது. இதைப் பாடியவர் பெருங் கெளசிகனார் என்னும் புலவர். 'இரணிய முட்டத்துப் பெருங் குன்றுார்ப் பெருங் கெளசி கனார்' என்பது அவர் முழுப் பெயர்.

மலைபடுகடாத்துக்குக் கூத்தர் ஆற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு. நன்னனிடம் சென்று பரிசில் பெற்று வந்த கூத்தன் ஒருவன் வறுமையால் வாடிய மற்றொரு கூத்தனைக் கண்டு, நீ நன்னனிடம் போனால் என்னைப் போல நலம் பெறுவாய்' என்று சொல்லி, நன்னன் ஊருக்குப் போகும் வழியையும் நன்னனுடைய இயல்பையும் சொல்லி ஆற்றுப்படுத்துவதனால் இது கூத்தராற்றுப்படை என்னும் பெயர்பெற்றது. மலையிலே கேட்கும் பலவகை ஓசைகளை இடையிலே புலவர் வருணிக்கிறார். 'மலைபடு கடா அம்மாதிரத் தியம்ப"