பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ் நூல் அறிமுகம்

என்று ஒரடி அங்கே வருகிறது. மலையிலே உண்டாகும் ஒசைகள் திசைகளிலெல்லாம் ஒலிப்ப? என்பது பொருள். அங்கே வரும் மலைபடுகடாம் என்ற தொடரே இந்தப் பாட்டுக்குப் பெயராயிற்று. கடாம் என்பது ஒசையைக் குறிக்கும் சொல் என்று தோன்றுகிறது. மலையாகிய யானையிடத்தில் தோன்றும் மதம் போன்ற ஓசை' என்று பொருள் செய்து, கடாம் என்பது ஆகுபெயராக நின்று ஒசையைக் குறித்தது என்று உரையாசிரியர் சொல்வார். மலைபடுகடாம் என்ற பெயரே கடபடா என்ற ஒலியைத் தோற்றுவிக்கிறது.

கூத்தருடன் பாடுபவரும் விறலியரும் வருகிறார்கள். அதைச் சொல்லும் போது பலவகை வாத்தியங்களைப்

பற்றிய செய்திகள் வருகின்றன. மலைச்சாரலின் வருணனை வருகிறது. அங்குள்ள மக்களும் வேறு இடங் களில் உள்ள கோவலர் வேடர் முதலியவர்களும்

வருவாருக்கு உணவளித்து உபசரிக்கும் அன்பைப் பார்க் கிறோம். வழியிலே நேரக் கூடிய இடையூறுகளையும் அவற்றினின்றும் தப்பிச் செல்லும் உபாயங்களையும் அறிகிறோம்.

நன்னனுடைய ஊராகிய செங்கண்மாவின் சிறப்பைப் பாட்டு விவரிக்கிறது. அவனைக் காண்பதற்காக வந்தவர் கள் பலவகையான கையுறைகளைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள். அவன் தன்னிடம் வந்த விறலியருக்கும் கூத்தருக்கும் பல பரிசுகளை நல்குகிறான். - .

நன்னனுக் குரியது நவிர மலை. அங்கே காரியுண்டிக் கடவுள் எழுந்தருளி யிருக்கிறார். காரி-நஞ்சு. நஞ்சை உண்ட கடவுள் என்பது பொருள். அவரைப் பற்றிய செய்திகள் வருகின்றன. நவிர மலையைப் பர்வத மலை என்றும், காரியுண்டிக் கட்வுளைக் காளகண்டேசுவரர்