பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மலைபடுகடாம் 77

என்றும் இப்போது வழங்குகிறார்கள். 583 அடிகளை உடையது இந்தப் பாட்டு.

குறமகளிர் தம் கணவர் பட்ட புண்ணால் உண்டாகிய வருத்தத்தைப் பாட்டுப் பாடி மறக்கச் செய்கிறார்கள். யானையைக் கட்டுத்தறியிற் கட்டும் பாகர்கள் சில வட சொற்களைக் கூறிப் பயிற்றுகிறார்கள். பல வழிகள் சேரும் இடத்தில் தாம் செல்லும் வழியை அடையாளம் காட்டப் புல்லை முடிந்து வைக்கிறார்கள். நன்னன் பாணருக்குப் பொற்றாமரைப் பூவையும் விறலியருக்கு நகைகளையும் வழங்குகிறான். -

பாட்டின் தொடக்கத்தில் மத்தளம், சிறுபறை, கஞ்ச தாளம், கொம்பு, நெடுவங்கியம், குறுந்தும்பு குழல், கரடிகை, எல்லரி, ஒருகண் மாக்கிணை ஆகிய வாத் தியங்களின் பெயர்கள் வருகின்றன.

கூத்தருக்கு ஐந்து வகையான பொருள்களை எதிர் வரும் கூத்தன் சொல்கிறான். வழியிலுள்ள நன்மை தீமைகள், அங்கங்கே விளைகின்ற உணவுப் பொருள்கள். மலைகளின் தன்மை, சோலைகளின் தன்மை, காட்டின் தன்மை என்பவை அவை.

விளைகின்ற உணவுப் பொருள்களைச் சொல்லும். போது, ஒரு பிடியில் ஏழு எள்ளுக் காய்களே அடங்கும் என்கிறார் புலவர். வரகுக் கதிர் வாதியின் விரலைப்போல இருக்கிறதாம், திணைக்கதிர் யானைக் கன்றின் துதிக்கை போலத் தோன்றுமாம். அவரைக்காய் அரிவாளைப் போல இருக்கிறது. • - -

வழியிலே போவார்களை அங்கங்கே உள்ள பெண்கள் தம் பிள்ளைகளை அனுப்பி, மாமனென்றும் அண்ண னென்றும் முறை சொல்லி அழைத்துவரச் செய்து விருந் தாட்டுகிறார்கள். . . .