பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழ் நூல் அறிமுகம்

மறுமலர் அணிந்த காறிரு முச்சிக் குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி அகம்மலி உவகை. ஆர்வமொடு அளைஇ மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்'

என்பது இதைச் சொல்லும் பகுதி.

மலைப் பக்கத்தில் உண்டாகும் ஒசைகள் பல. அருவியில் அரமகளிர் ஆடும்போது தாளத்தைப் போல ஒலிக்கும் ஓசை, யானைத் தலைவனைப் பிடிக்கக் கானவர் . செய்யும் ஆரவாரம், முள்ளம் பன்றியின் முள்ளால் புண்பட்ட வேடர் அழும் அழுகை, புலி பாய்ந்ததனால் தம் கணவர் மார்பில் உண்டான புண்ணின் வலியைப் போக்கக் குறமகளிர் பாடும் பாட்டின் இசை, வேங்கை' மரத்தில் பூத்த பூவைப் பறிக்கும் மகளிர் புலி புலி என்று கூவும் ஆரவாரம், புலி பாய்ந்ததனால் பிடியும் சுற்றமும்: கூப்பிடும் முழக்கம், குரங்குக் குட்டி பாறைப் பிளப்பிலே வீழ்ந்தது கண்டு அதன் தாயும் பிற குரங்குகளும் வருந்திச் செய்யும் ஆரவாரம், ஆண் குரங்கு தேனடை யைக் கலைத்து இடும் கூக்குரல், கானவர் பகைவர் களுடைய அரண்களை மோதும் உவகைக் குரல், குறவர் தம் மகளிரோடே ஆடும் குரவைக் கூத்தின் ஒசை, ஆறுகள் பாறைப் பள்ளங்களிலே வீழும் ஒசை, குழியிலே அகப்பட்ட யானையைக் கட்டுத்தறியிலே பிணிக்கும். பாகர் அவற்றைப் பழக்கும் ஓசை, திணைப்புனம் காக்கும் மகளிர் கிளி முதலியவற்றை ஒட்டும் குரல், இடபமும் மரையான் காளையும் பொரும் ஓசை, எருமைக் கடாக்கள். போரிடும் கம்பலை, பலாப்பழத்தின் கொட்டைகளைப் பெறுவதற்காக இளம் பிள்ளைகள் கன்றுக் குட்டிகளைப் பிணைத்துக் கடாவிடும் ஒசை, கரும்பாலையின் ஒலி, தினைக் கதிரைக் கொய்யும் மகளிர் பாடும் வள்ளைப் பாட்டின் இசை, சேம்பையும் டிஞ்சளையும் காவல்