பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மலைபடுகடாம் - 7g。

புரிவோர் பன்றிகள் வராமல் முழக்கும் பறை ஒசை, இவ்வோசைகளின் எதிரொலிகள் என்னும் இத்தனையும் அங்கே எழுகின் நிறன.

"என்றஇவ் வனைத்தும் இயைந்துஒருங் கிண்டி

அவலவும் மிசையவும் துவன்றிப் பலவுடன் அலகைத் தவிர்த்த எண்ணருக் திறத்த மலைபடுகடா அம் மாதிரத்து இயம்ப'

என்று சொல்கிறார் புலவர். என்றுள்ள இந்த எல்லா ஓசைகளும் இயைந்து ஒருங்கு சேர்த்து, பள்ளத் திலும் மேட்டிலும் நெருங்கிப் பலவகையாகக் கணக்குக்கு அகப்படாமல் எண்ணற்ற திறத்தில் மலையில் ஒலிக்கும் ஒலி திசைகளில் ஒலிக்க' என்பது இப் பகுதியின் பொருள். - .

நன்னன் தன்னுடைய நவிர மலையின் மேலே மேகம் ஏறி மழை பொழிந்ததைப் போலப் பரிசில் தந்து அனுப்புவான் என்று பாட்டை முடிக்கிறார் புலவர்.

திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் வரை யில் உள்ள பத்துப் பாட்டுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இந்தப் பத்துப்பாட்டைச் சுவடிகளி லிருந்து எடுத்துச் செப்பஞ்செய்து அழகாகப் பதிப்பித்து வழங்கியவர்கள் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமி. நாத ஐயரவர்கள். அவர்கள் அந்தப் பதிப்பின் முகவுரையில் இந்தப் பத்துப் பாட்டை, 'அமிழ்தினிற் சிறந்த தமிழ்எனும் மடத்தை, கந்தரத்து அணிமணிக் கலன் அரசு என்ன, உத்தமர் புகழும் இப்பத்துப்பாட்டு' என்று: பாராட்டுகிறார்கள். . . . .