பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கற்றிணை

பத்துப்பாட்டு என்ற சங்கநூல் தொகுதிக்கு அடுத்த. படியாக வைத்து எண்ணுவது எட்டுத்தொகை. எட்டுத் தொகை நூல்களையும் நினைப்பூட்டிக்கொள்ள ஒரு பழைய வெண்பா உதவுகிறது. அது. - - -

கற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,

ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் எத்தும கலியே, அகம், புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை. இந்தப் பாட்டு இந்த நூல்கள் தோன்றிய கால அடைவை முறைப்படுத்திச் சொன்னது அன்று. ஏதோஒரு வகையில் எட்டு நூல்களையும் நினைவுபடுத்திக் கொள்ள் யாரோ ஒரு புலவர் பாடியது.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறுனின்ற மூன்று நூல்களும் அகத்துறைபற்றிய தனிப்பாடல்களின் தொகுதிகள். ஐங்குறுநாறு, கலித்தொகை என்பன அகத்துறைப் பாடல்கள் அடங்கியவை. அவற்றில் ஒவ்வொரு திணைக்குரிய பாடல்களையும் ஒவ்வொரு புலவர் தனித்தனியே பாடியிருக்கிறார். . . . . ;-. . . . .

விடுபாடல்களாக உள்ள அகத்துறைக் கவிதைகளைத்

தொகுத்து அடியளவுக்கு ஏற்றபடி மூன்று நூலாக அமைத்தார்கள். நாலடி முதல் எட்டடி வரையில் உள்ள