பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:82 தமிழ் நூல் அறிமுகம்

பாடல்களைத் தொகுத்து அதற்குக் குறுந்தொகை என்று பெயர் தந்தார்கள். ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரையில் உள்ள பாடல்களைத் தொகுத்து நற்றிணை என்று பெயர் வைத்தார்கள். பதின்மூன்று முதல் முப்பத்தேழு அடிவரையில் தொகுத்த தொகை நூலுக்கு நெடுந்தொகை அல்லது அகநானூறு என்று பெயர் வைத்தார்கள். அடியளவில் நடுவில் இருப்பது நற்றிணை.

அகத்துறைப் பாடல்களில் ஒவ்வொன்றும் ஐந்து திணைகளில் ஏதேனும் ஒரு திணையைச் சார்ந்ததாக இருக்கும், இன்ன பாடல் இன்ன திணையைச் சார்ந்தது என்ற வரையறை இலக்கணப்படி அமைந்திருந்தது; அகநானூற்றில் பழங்காலத்திலேயே இந்த வரையறை அமைந்திருந்தது. -

அகத்துறைப் பாடல்களையுடைய நூல்களுக்குத் திணை என்பதனோடு ஒட்டிய பெயரை அமைப்பது பழங்கால வழக்கம் என்று தெரிகிறது பதினெண் இழ்க்கணக்கு நூல்களில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி. ஐம்பது. திணை மாலை நூற்றைம்பது என்று உள்ளவற்றின் பெயர்களைக் கொண்டு இதை அறியலாம், வகையில் சிறிய பாடல்கள் அமைந்த தொகைக்குக் குறுந்தொகையென்றும், நீண்ட பாடல்கள் அமைந்ததற்கு நெடுந்தொகையென்றும் பெயர் வைத்தார்கள் இடையில் உள்ள நூலுக்கு நற்றிணை என்று பெயர் அமைத்தார்கள். நல்ல திணையில் அமைந்த பாடல்களையுடைய நூல் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த நூலைத் தொகுப்பித்தவன் பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி. அந்த மன்னன் ஒரு புலவரைக் கொண்டு இப்படித் தொகுக்கச்