பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 83

செய்திருக்க வேண்டும். அந்தப் புலவர் பெயர் தெரிய வில்லை. - -

இந்த நூலில் முதலில் கடவுள் வாழ்த்தும் பிறகு நானூறு அகத்துறைப்பாடல்களும் உள்ளன. நற்றிணை நானுறு என்றும் இதனை வழங்குவது உண்டு இப்ப்ோது 234-ஆம் பாட்டு முழுவதும், 885-ஆம் பாட்டின் பிற்பகுதியும் கிடைக்கவில்லை. இதனை முதல் முதலில் ஆராய்ந்து உரையுடன் வெளியிட்டவர் பின்னத்துார்

அ. நாரயணசாமி ஐயர்.

இந்த நூலில் 56 பாடல்களுக்கு உரிய ஆசிரியர்களின் பெயர் தெரியவில்லை. மற்றப் பாடல்களைப்பாடியவர்கள் 192 புலவர்கள். ஒவ்வொரு பாட்டுக்குப் பின்பும், அந்தப் பாட்டின் துறையை விரிக்கும் குறிப்பு இருக்கிறது. அகத் துறைப் பாடல்கள் எல்லாவற்றிற்கும் இப்படிக் குறிப்பு அமைப்பது பழைய வழக்கம். - -

இந்த நூலில் உள்ள கடவுள் வாழ்த்தைப் பாடினவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். திருமாலின் துதியாக அமைந்தது அந்தப் பாட்டு, அப்பெருமான் உலகமே தன் டிைவமாகக் கொண்டவன் என்று போற்றுகிறது அந்தப் பாட்டு, அவனுக்கு இந்த விரிந்த பெரிய பூமியே திருவடி : இந்த உலகைச் சூழ்ந்த நீலப் பெருங்கடலே ஆடை, ஆகாயமே திருமேனி, திசைகளே திருக்கரங்கள்; சந்திரனும் சூரியனும் திரு விழிகள்; எல்லா வற்றினூடும் அந்தர்யாமியாய் இருப்பதோடு, எல்லா வற்றையும் தனக்குள் அடக்கியவன் அவன், வேதத்தினால் சொல்லப்பட்ட மு த ற் பொருள். திருக்கரத்தில் சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலை இப்படியெல்லாம். பெரியோர்கள் சொல்வார்கள்' என்று கூறுகிறார். பெருந்தேவனார். - . . . ". . . . . .