பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) } } }

செய்தல், அல்லது பொருள்களின் பெயர் எழுதிய அட்டை களே அவ்வப் பொருள்களின்மேல் வைக்கச் செய்தல்.

சில விளையாட்டுப் பயிற்சிகள் : இளம் ஆசிரியர் களுக்குப் பயன்படும் பொருட்டு ஒரு சில பயிற்சிகள் ஈண்டுத் தரப்பெறுகின்றன. ஒவ்வொரு விளேயாட்டையும் ஆசிரியர் யுக்திக்கேற்றவாறு மாற்றி மாற்றி விளேயாடச் செய்யலாம். விளையுாட்டுக்களில் போட்டி இருந்தால்தான் சுவை ஏற்படும்.

(1) இனப் பயிற்சி : ஒரு வீட்டிலுள்ள பொருள்களின் பட்டி ஒன்றினைக் குழந்தைகளிடம் கொடுத்திடுக. அப்பொருள்கள் சமையல் அறை, படுக்கை அறை, படிப்பு அறை, உண்ணும் அறை ஆகியவற்றில் எந்தெந்த அறையில் எவை எவை இருக்கவேண்டும் என்று பிரிக்கச் செய்க. இலக்கணப் பாடத்தில் பெயர்ச் சொல், வினேச்சொல், இடைச் சொல், உரிச்சொல் ஆகியவற்றுள் சொற்களைப் பிரித்து அடக்கும் பயிற்சிகளேத் தரலாம். நிலம், நீர், காற்று என்ற பிரிவுகளில் அடங்கும் பல சொற்களடங்கிய ஒரு பட்டியைக் கொடுத்து அதிலடங்கிய சொற்களே இனப் படுத்தும்படி சொல்லலாம்.

(2) இணைப்பு விளையாட்டு : இதில் பலவகை உண்டு.

(அ) படங்களையும் அவை குறிக்கும் சொற்களையும்

இணைக்கச் செய்தல்.

(ஆ) சொற் பொருத்தம்': பொருத்தமான சொற்களே

இணைக்கும்படி செய்தல்.

(எ-டு) கைக்கு | தொப்பி

காலுக்கு வளையல் தலைக்கு செருப்பு