பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) | 3 ||

ஒருமுறை வகுப்பில் படித்துணர்ந்தபின் வகுப்பிலேயே மாணுக்கர்களைக்கொண்டு நேராக நடித்தலில் இறங்கச் செய்யலாம், தேவையான நடிகர்களைப் பொறுக்குதல், யார் யார் எந்தெந்தப் பாத்திரமாக இருந்து நடிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்தல் ஆகியவை முடிவுற்றதும் குழந்தைகள் நடித்தலில் இறங்குவர். அவரவர் இடம் வந்தவுடன் வழக்கம்போல் உரையாடல்களை நெட்டுருச் செய்து ஒப்புவிக்காமல் இடத்திற்கேற்றவாறு எங்ங்ணம் பேசவேண்டும் என்பதை அவரவர்களே தங்களால் இயன்றவரை கற்பனேயில் உறுதிசெய்துகொண்டு பேசவேண்டும். உரையாடல்கள் முதலில் ஆசிரியர் எதிர்பார்க்கும் நிலைக்கு அமையாவிடினும் பழகப் பழக இதில் நல்ல பயனைக் காணலாம். இதில் கற்பனை வளர்ச்சிக்கு மிக்க இடம் உள்ளது. ஆசிரியர்கள் இம் முறையைக் கையாளுவதற்கு நிறைந்த பட்டறிவுடையவர்கள்ாகவும், இம் முறையில் தேர்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய நடிப்பை இரண்டாம் வகுப்பிலிருந்தே தொடங்கலாம். அதிகமான பேச்சுக்கு இடமில்லாத மிகச் சிறிய கதையில் தொடங்கில்ை நாளடைவில் நல்ல பயனை எய்தலாம்; ஒரு திட்டப்படி பயிற்சி தரப்பெறின், குழந்தைகள் ஐந்தாவது வகுப்பினே அடையும்பொழுது இதில் நல்ல திறனையடைவர். இம்முறையில் வகுப்பிலுள்ள ஒரு குழு நடிப்பில் இறங்கும்பொழுது மீதியுள்ள குழந்தைகள் அதை நன்கு கவனித்துக் குறைக்ளேக் களைந்து நல்ல திருத்தங்களைத் தரலாம். சிறிது நேரம் பயிற்சி பெற்றதும், நாடகம் நல்லமுறையில் உருவாகும் ; பாத்திரங்களின் பேச்சு சிறந்தமுறையில் அமையும். இம் முறையில் உருவாகும் நாடகங்களின் உரையாடல்கள் இயற்கையாக இருக்கும் ; குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். தாம் மேற். கொண்ட பாத்திரங்களுக் கேற்றவாறு குழந்தைகள் சொற்களையும் நடிப்பினையும் கையாளுவர்.

குழந்தைகள் தத்தம் பகுதிகளே மனப்பாடம் செய்தபின் நடிக்கும் நடிப்பிலும் பயன் உண்டு. இதில் நினை