பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 தமிழ் பயிற்றும் முறை

கூடும். அப்படிப்பட்ட சமயத்தில் ஆசிரியர் பள்ளி வேலை முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இத்திருத்த வேலேயை வைத்துக்கொள்ள வேண்டும். நாள் தோறும் இந் நிலை ஏற்படாது.

ஒப்படைப்புக்கள் : ஒப்படைப்புக்கள் கற்பித்தலுக்குத் துணையாக இருக்கும் குறிப்புக்களே. ஒப்படைப்புக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மாணுக்கன் செய்ய வேண்டிய வேலே விவரிக்கப்பெற்றிருக்கும். எடுத்துக் காட்டாக, ஒரு வாரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிக்கவேண்டிய பகுதி, எழுதவேண்டிய அளவு, வாய்மொழிப் பயிற்சியின் அளவு முதலியவை காணப் பெறும். மாணுக்கனுடைய சிந்தனையைத் தூண்டுவதற்கும் அவனுகவே பல பொருள்களைக் கண்டறிவதற்கும் குறிப்புக்கள் தரப்பெற்றிருக்கும். தன் அறிவைப் பயன்படுத்தி முடிவுகளைக் காணுமாறு சில குறிப்பு விளுக்கள் அவற்றில் காணப்படும். ஆழ்ந்து படித்தற்குத் தேவையான குறிப்புக்களும் நூலகப் புத்தகங்களிலும் பாடப்புத்தகங்களிலும் காணுத சில நுட்பமான குறிப்புக்களும் அவற்றில் இடம் பெற்று இருக்கும். தன் முயற்சி வேலையை மாணுக்கன் எங்ங்னம் தொடங்கவேண்டும் என்ற விளக்கமும், கடினப் பகுதிகளின் பொருள்விளக்கமும் சொல்விளக்கமும் அவற்றில் அடங்கியிருக்கும். நன்கு சிந்திப்பதற்கும் படிப்பதற்கும் என்னென்ன புத்தகங்களிலிருந்து என்னென்ன பொருள்களைப் பெறலாம் என்றும், என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றும் ஒப்படைப்புக்களில் புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பெற்றிருக்கும். ஒப்படைப்புக்களே ஆசிரியர் மிகக் கருத்துடனும் சிந்தனையுடனும் ஆயத்தம் செய்தல் வேண்டும். மாணுக்கரின் மனநிலை, விருப்புவெறுப்புக்கள் முதவியவற்றை அறிந்து அவற்றை ஆயத்தம் செய்யவேண்டும்.

இம்முறையின் நிறைகள் : தனிப் பயிற்சி முறையால் மாளுக்கர்கள் அவரவர் திறமைக்கேற்றவாறு விரைவாகவும்