உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ் பயிற்றும் முறை

அறிவுதரும் துணைக்கருவிகளால் பெற இயலாது. வாழ்வில் நேரிடும் எத்தனையோ நிகழ்ச்சிகளால் உண்மைக் கல்வியைப் பெறமுடியும். அம்மையாரின் தனிவீறுபற்றிய கருத்து உடற்கூறினேயொட்டியே உள்ளது ; மனத்தின் அடிப்படையில் காணக் கிடக்கும் சில முக்கிய உண்மைகளுக்கு அம்மையார் இடந்தரவில்லை. புலன்களுக்குத் தனியாக அளிக்கப்பெறும் பயிற்சி நவீன உளவியல் உண்மைகளுக்கு உகந்ததாக இல்லை. மூன்று வயதிலிருந்து ஏழு வயதுவரையிலுமுள்ள குழந்தைகள் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட வியத்தகு வினுக்களைக் கேட்பதற்கு அம்மையாரின் கொள்கை விளக்கந்தரவில்லை. அக் குழந்தைகளின் மனம் சதா துடிப்புடனிருப்பதற்குரிய காரணத்தை இக்கொள்கை புலப்படுத்தவில்லை. அம்மையாரின் துணைக் கருவிகள் குழந்தைகள் தம் உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு நல்ல வாய்ப்புக்களேத் தரவில்லை. விருப்பப்படி பலவிதமாகப் பேச விரும்பும் குழந்தைகள் இத் துணேக்கருவிகளால் பயன் அடைவது மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். எல்லாப் பாடங்களையும் ஒன்றுடனென்று பொருத்திக் கற்பிக்கும் வாய்ப்புக்கள் இம் முறையில் இல்லே ; எல்லாம் துணைக்கருவிகளை யொட்டியே இயங்கவேண்டியுள்ளன. ஆசிரியர் யுக்திப்படி செய்யும் துணைக்கருவிகளே இங்குப் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை. நமது நாட்டுப் பள்ளிகளில் இம் முறையைப் பின்பற்றுவது எளிதன்று. துணைக்கருவிகளின்றி இம் முறையைக் கையாளமுடியாது ; துணைக்கருவிகளும் மலிவாகக் கிடைப்பதில்லை. எண்ணிப் பார்த்தால் இவை யாவும் முறையின் குறைகள் அல்ல என்பது தெளிவாகும்.

4. மேற்பார்வைப் படிப்பு

மேற்பார்வைப் படிப்பு’ என்பதை ஒரு கற்பிக்கும் முறை என்று சொல்லுவதைவிட, படிப்பில் நல்ல பழக்கங்களை உண்டாக்க மேற்கொள்ளும் ஒருவழி என்று சொல்லலே பொருந்தும். மேனுட்டுக் கல்வி நிபுணர்கள் இதைக்