பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் (2) 麓53

குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிரெளன் வெல் என்ற அறிஞர் தமது நூலில் மேற்பார்வைப் படிப்பு பதின்ைகு வகைப்படும் என்று கூறுகின்ருர். பாசிங் என்ற முறைவல்லார் எல்லாவித மேற்பார்வைப் படிப்புக்களையும் இரண்டு வகையில் அடக்கிவிடலாம் என்று கருதுகின்ருர். * ...

முதலாவது : மாளுக்கர்களுக்குப் படிக்கும் முறைகளில் அதற்கென ஒதுக்கப்பெற்றுள்ள பாட வேளையில் ஆசிரியர் வழிகாட்டி அவர்களைப் படிக்குமாறு செய்தல். அஃதாவது, அந்தப் பாட வேளையில் ஆசிரியர்கள் மாணுக்கர்களோடு சேர்ந்து படித்தும், தனித்தனி மாணுக்கர்கட்குத் தேவையான துணைபுரிந்தும், ஆசிரியர்கள் மாணுக்கர்களுக்கு எப்படிப் படிப்பது என்பதைக் காட்டியும் கற்பித்தலே மேற்பார்வைப் படிப்பாகும். இதுவே பெரும்பான்மை யோரின் கருத்துமாகும். -

இரண்டாவது : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை மட்டிலும் மேற்பார் வைப் படிப்பு என்று கூறுவது பொருந்தாது ; மா ணுக்கரின் எல்லாப் படிப்பு வேலைப் பகுதிகளேயும் இது குறிக்கின்றது. ஷ்ரெவ் (Shrewe), கில்லர் (Kizer) என்பார் இக் கருத்தையே கொள்ளுகின்றனர். ஆளுல் முதலாவது வகையைச் சரியான மேற்பார்வைப் படிப்பு என்று பாஸிங் ஒப்புக்கொள்ளுகின்ருர். ஒரு திட்டமும் தெளிவு மில்லாத படிப்பை மேற்பார்வைப் படிப்பு என்று கூறுதல் பொருந்தாது என்பது அவர் கருத்து. எனவே, அவர் கருத்துப்படி, திறனுள்ள படிப்பின் பல வழிகளையும் மாளுக்கர் உணர்ந்து படிக்க ஆசிரியர் உதவிசெய்து பயனுள்ள முறையில் வகுப்பில் புதுப்பாட ஒப்படைப்புக்களேப் படிப்பதே மேற்பார்வைப் படிப்பாகும். இக் கருத்துப்படி மேற்பார்வைப் படிப்பில் மூன்று படிகள் உள்ளன. அவை : (1) பயனுடன் படிப்பதற்குரிய சிறந்த வழிகளையும் முறைகளையும் மாளுக்கர் அறியும்படி செய்தல்;

  • Brownwell, W. A: A Study of Supervised Study.