பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழ் பயிற்றும் முறை

(2) மாணுக்கர்கள் படிக்கும்பொழுது ஆசிரியரே வழிகாட்டியாக நின்று அம்முறைகளின் திறனே அவர்கள் எய்தும்படி செய்தல் ; (3) வகுப்பறையில் ஒரு பாட வேளே யில் புதுப்பாட ஒப்படைப்புக்களைக் கற்கும்பொழுது ஆசிரியர் துணேயாக இருத்தல்.

மேற்பார்வைப் படிப்பு நிகழுங்கால், ஆசிரியர் மாணுக்க ரது படிப்பில் அடிக்கடித் தலையிடக்கூடாது. விளேயாட்டுக் களில் ஒரு நடுநிலையாளர் மேற்கொள்ளும் செயலைப் போன்ற தொரு பொறுப்பினைத்தான் அவர் மேற்கொள்ளவேண்டும். படிப்பில் மாணுக்கர்களுக்கு நேரிடும் ஐயங்களைப் போக்கலாம் ; தவருண முறையில் அவர்கள் செல்லும்பொழுது அதைத் தடுத்து நேரான வழியில் கொண்டுசெலுத்தலாம். படிப்பில் பலவகைத் திறன்களைப் பெறவும், உள்நோக்கம் பெறவும், பல பகுதிகளில் சுவையறிந்தின்புறவும் வேண்டிய துணைகளைச் செய்யலாம். வகுப்பில் பாடம் நடைபெறும்பொழுது ஆசிரியர் வாய்மொழி, படங்கள், சொல்லோவியங்கள் முதலியவற்ருல் விளக்கந் தந்தும் நடைமுறை, கருத்துக்கள், கொள்கைகள், ஆராய்வு நோக்கங்கள், மனப்பான்மைகள் முதலியவற்றை எடுத்துக் காட்டியும் படிப்பில் திறன்களை வளர்க்கலாம். மேற்பார்வைப் படிப்பில் தனிப்பட்ட முறையில் திறமையுடன் தன் வேலையைச் செய்யும் வழியை மாளுக்கனுக்கு எடுத்துக் காட்டித் துணைசெய்வதையே ஆசிரியரின் சிறந்த வேலையாகக் கூறலாம். என்று கால்வின் என்ற முறைவல்லார் கருதுகின்ருர். எனவே, இற்றை நாளில் புதுமுறைகளில் மேற்பார்வைப் படிப்பையும், அதற்குரிய காரணங்களேயும், மேற்பார்வைப் படிப்பை நடத்தும் முறைகளையும், அதனுல் விளேயும் நற்பயன்களையும் அடிக்கடி நாம் கேள்வியுறுகின்ருேம்.

மேற்பார்வைப் படிப்பின் அவசியம் : கல்வி புகட்டத் தொடங்கியநாள் தொட்டு மாணுக்கர்கள் புதியபாடத்தை ஒரளவு முன்னரே படித்துவரவேண்டும் என்ற கருத்து நிலவியபோதிலும், இந்த முன் தயாரிப்பிலும் ஆசிரியருக்குப்