பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 O தமிழ் பயிற்றும் முறை

தவிர, நெட்டுருச் செய்யும் சிறந்த முறைகளைக் கூறல், நூல்களைப் புரட்டிப் படித்தலில் பயிற்சி அளித்தல், சுருக்கங்களேயும் குறிப்புச் சட்டகங்களையும் எழுதப் பயிற்றல் ஆகிய பழக்கங்களேயும், இன்னுேரன்ன பிற படிக்கும் பழக்கங்களையும் இவ் வேளையில் மானுக்கர்கட்குக் கிட்டும்படி செய்யலாம். -

சில குறைகள் : மேற்பார்வைப் படிப்பிலும் சில குறைகளிருப்பதாக முறைவல்லார் கூறுகின்றனர். இம் முறையில் மாளுக்கர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன் முயற்சியும் குறையும் என்று கருதுகின்றனர். இது தவறு. ஆசிரியர் தேவையுள்ளபோதன்றி மாணுக்கர்கள் படிப்பில் குறுக்கிடுவதில்லை. அதிகமாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு இப் படிப்பு இன்னும் அதிக வேலையைத் தருகின்றது என்பர். ஆசிரியரின் கடமைகளில் ஒன்ருக இப் படிப்பை ஆக்கிவிட்டால் பளு குறையும். பள்ளிக்கு நூல் வாங்கல், படிக்கும் வசதிகளமைத்தல் போன்ற செலவினங்களால் பணம் அதிகமாகச் செலவாகும் என்ற காரணத்தையும் குறையாகக் காட்டுகின்றனர். படிப்பில் பயன்தரத்தக்க முறைகளே மேற்கொள்ளுவதில் செலவை இடையூருகக் கருதுதல் கூடாது. பள்ளிவேலேநேரம் அதிகரிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. ஐந்துமணி நேரத்திற்குமேல் ஒருமனி கூடுதலாக மாணுக்கர் இருந்து படித்தால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. இதைமேற்கொண்டால் தனிவகுப்பு வைத்து நடத்தும் வேலையை ஆசிரியர் குறைத்துக்கொள்ளலாம். புதிய அறைகள் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இருக்கும் வகுப்பறைகளைக் கொண்டே இப் படிப்பை நன்கு மேற்கொள்ளலாம்.

5. கண்டறி முறை

' குழந்தைகளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு குறை

வாகச் சொல்லக் கூடுமோ அவ்வளவுக்கு அவ்வளவு செய்திகளைக் குறைவாகச் சொல்லவேண்டும் , எவ்வளவுக்கு