பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழ் பயிற்றும் முறை

முறையில் கற்பித்தலிலும் இக் கண்டுபிடித்தல் முறையின் கூறினைக் காணலாம். குழந்தைகள் கற்கும் இடங்களில் அவர்கள் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடம் செல்லவும், ஒருவரோடொருவர் கலந்து பேசவும் உரிமை அளிக்கப் பெறுகின்றது. இயன்றவரை குழந்தைகள் எதைவேண்டுமானுலும், எவ்வளவு வேண்டுமானுலும் வினவலாம் என்ற உரிமையும் அளிக்கப்பெறுகின்றது. இவ் விளுக்களின் விடைகளே அவர்களே கண்டறியவும் வாய்ப்புக்கள் தரப்பெறுகின்றன. சிலசமயம் ஆசிரியரும் சில வினக்களைக் குழந்தைகளிடம் விடுப்பதுண்டு. அவை அவர்களின் சிந்தனையைத் துண்டியும், விடுப்பூக்கத்தைக் (Instinct of curiosity) கிளறியும் மாணுக்கர்களிடையே உற்சாகத்தை ஊட்டும் ; புதிய தகவல்களே அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தையும் எழுப்பிவிடும்.

ஆசிரியரின் பங்கு : இம்முறையில் ஆசிரியருக்கு அதிக வேலை இல்லை என்று சொல்லமுடியாது. உண்மையாகக் கூறிஞல், இதில்தான் அதிகவேலே உள்ளது என்று சொல்ல வேண்டும். ஆசிரியருக்குப் பலநூற் பயிற்சி வேண்டும் ; அவர் ஏராளமான புத்தகங்களைப் படித்தவண்ண மிருக்கவேண்டும். அப்பொழுதுதான் தேவையான தகவல்கள் அவருக்குத் தெரிவதுடன் அவை எங்குள்ளன என்பதை மாணுக்கர்களுக்குத் தெரிவித்து, படிப்பின்பால் அவர்களே ஏவவும் இயலும். மாணுக்கர்களிடம் வளர்க்கவேண்டிய கூர்ந்து நோக்குந் திறன், உற்சாகம், அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சித் திறன் ஆகிய பண்புகளே ஆசிரியர் பெற்றிருக்க வேண்டும். விளுக்களைக் கையாளும் திறன் ஆசிரியரிடம் மிக்கிருக்கவேண்டும். புத்தகங்களைப் படிக்கும் முறையை அவர்கட்குக் காட்டவேண்டும். இம் முறையைச் சிறப்பாகக் கையாள வேண்டிய திட்டங்களே வகுக்கவும், சிந்தனையைத் துண்டும் விளுக்களைத் தயாரிக்கவும் ஆசிரி யருக்கு அதிகக் காலம் வேண்டும் ; நிறைந்த பட்டறிவும் வேண்டும். அவைகளே நிறைவேற்றுவது எளிதும் அன்று; மாளுக்கரின் வயது, அறிவு நிலை, உற்சாகம், திறன் ஆகிய